ராம நாராயணன்
திரைப்பட இயக்குனர் / From Wikipedia, the free encyclopedia
இராம நாராயணன், (Rama Narayanan, ஏப்ரல் 3, 1949 - சூன் 22, 2014) இந்தியத் திரைத்துறையைச் சார்ந்தவர். தென்னிந்திய மொழிகளில் திரைப்படங்களை இயக்கியவர். தயாரிப்பு பணிகளையும் செய்துள்ளார். இவரது திரைப்படங்களில் பலவற்றில் விலங்குகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.[2] 36 ஆண்டுகளில் 125 திரைப்படங்களை இவர் இயக்கியுள்ளது ஓர் உலக சாதனையாகும்.[3][4] தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராகவும் இருந்தவர். இவர் ஒரு மலேய மொழிப் படத்தை இயக்கியுள்ளார்.[4] சில திரைப்படங்களுக்கு கதையும் எழுதினார்.
விரைவான உண்மைகள் இராம நாராயணன், பிறப்பு ...
இராம நாராயணன் [1] | |
---|---|
![]() | |
பிறப்பு | (1949-04-03)ஏப்ரல் 3, 1949 |
இறப்பு | சூன் 22, 2014(2014-06-22) (அகவை 65) |
மற்ற பெயர்கள் | ராமநாராயணன், ராம் நாராயண் |
பணி | இயக்குநர், தயாரிப்பாளர் |
பெற்றோர் | இராமசாமி மீனாட்சி ஆச்சி |
வாழ்க்கைத் துணை | இராதா (இறந்துவிட்டார்) |
பிள்ளைகள் | தேனாண்டாள் முரளி |
மூடு