From Wikipedia, the free encyclopedia
ரா. கி. ரங்கராஜன் (அக்டோபர், 5, 1927 - ஆகஸ்ட் 18, 2012) என்னும் ராயம்பேட்டை கிருஷ்ணமாச்சாரி ரங்கராஜன் ஒரு தமிழக எழுத்தாளர் மற்றும் இதழாளர். வரலாற்றுப் புதினங்கள், குற்றக் கதைகள், கட்டுரைகள், வேடிக்கை நாடகங்கள், மொழிபெயர்ப்புகள், குறும்புக் கதைகள், நையாண்டிக் கவிதைகள் எனப் பல பாணிகளில் எழுதியுள்ளார்.
ரங்கராஜன் 5-10-1927-இல் கும்பகோணத்தில் ரெட்டியார்குள வடகரையில் 21ஆம் எண் வீட்டில் பிறந்தார். [1] இவர் தந்தை மகாமகோபாத்தியாய ஆர். வி. கிருஷ்ணமாச்சாரியார் ஒரு சமசுகிருதப் பண்டிதர். இவர் அண்ணன் ரா.கி.பார்த்தசாரதியும் (ஆர்.கே.பார்த்தசாரதி) சமசுகிருதப்பண்டிதரே. இவரது சொந்த ஊர் கும்பகோணத்தை அடுத்த ராயம்பேட்டை ஆகும்.[2]
ரங்கராஜன் தன் 16-ஆம் வயதில் எழுத ஆரம்பித்தார். 1946-இல் பேராசிரியர் சீனிவாசராகவனின் பரிந்துரையால் சக்தி வை. கோவிந்தனின் காலபைரவன்[2] இதழில் உதவியாசிரியராக தனது எழுத்துலக வாழ்க்கையைத் தொடங்கினார். [1] பின்னர் பெ.தூரனின் காலச்சக்கரம்’ என்ற வார இதழிலும் உதவி ஆசிரியராகத் தொடர்ந்தார். 1950-இல் குமுதம் நிறுவனம் சிறிது காலம் நடத்திய ஜிங்லி என்ற சிறுவர் இதழில் சேர்ந்தார். அவ்விதழ் நின்ற பின்னர் குமுதம் இதழில் ஆசிரியர் குழுவில் இணைந்து 42ஆண்டுகள் பணியாற்றினார். அண்ணாநகர் டைம்ஸ் என்ற இதழில் கட்டுரைகள் எழுதினார்
கிருஷ்ணகுமார் என்ற பெயரில் அமானுட கதைகளும் டி. துரைசாமி என்ற பெயரில் உண்மைக் குற்றங்களின் அடிப்படையில் குற்றக்கதைகளும் வினோத் என்ற பெயரில் தமிழ்த்திரைப்படச் செய்திக்கட்டுரைகளும் (லைட்ஸ் ஆன் வினோத்) எழுதினார். சூர்யா, ஹம்சா, மாலதி, முள்றி, அவிட்டம், மோகினி ஆகிய புனைப்பெயர்களிலும் எழுதினார்.
இவர் 1500-க்கும் மேற்பட்ட கதைகளையும் , 50 நாவல்களும், ஏராளமான கட்டுரைகளும், மொழிபெயர்ப்பு நாவல்களும் எழுதியுள்ளார். இவற்றுள் பல குமுதம் ஆனந்த விகடன் முதலான இதழ்களில் தொடர்களாக வெளிவந்தன.
இவருடைய மூன்று நாவல்கள் திரைப்படங்களாக வெளிவந்தன. அவை:
பல படைப்புகள் சின்னத் திரையிலும் இடம் பெற்றுள்ளன.
கமல்ஹாசனின் மகாநதி திரைப்படத்திற்கு உரையாடல் எழுதினார். [2] [3]
இளம் எழுத்தாளர்களுக்குக் கதைஎழுதும் நுணுக்கங்களைக் கற்றுத்தரும் எப்படிக் கதை எழுதுவது? என்ற வகுப்பினையும் தான் ஒருவராகவே நடத்தி வந்தார்.
ரா.கி.ரங்கராஜன் கமலா என்பவரை மணந்தார். அவர்கள் இரண்டு ஆடவயும் மூன்று மகளிரையும் ஈன்றனர். [4]
“ | "ரங்கராஜன் ஒரு கர்மயோகி. குமுதம் ஸ்தாபன விசுவாசம்.ஆசிரியர் எஸ்.ஏ.பி மேல் பக்தி. கிடைத்தது போதும் என்கிற திருப்தி. சக எழுத்தாளர்கள் மேல் பொறாமையற்ற பரிவு, நேசம்,வெள்ளைச் சட்டை, வெள்ளை வேட்டி. நண்பர்களைக் கண்டால் கட்டியணைத்து முதுகில் ஒரு ஷொட்டு - இவை இவருடைய சிறப்புகள்" - சுஜாதா | ” |
ரா.கி.ரங்கராஜன் 2012 ஆகத்து 12ஆம் நாள் சென்னையில் மரணமடைந்தார். [2]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.