ரங்கோன் ராதா 1956-இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. காசிலிங்கத்தின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், எஸ். எஸ். ஆர் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1] கா. ந. அண்ணாதுரையால் எழுதப்பட்ட ரங்கோன் ராதா எனும் புதினத்திற்கு, மு. கருணாநிதி திரைக்கதை வசனம் எழுதினார்.[2]

விரைவான உண்மைகள் ரங்கோன் ராதா, இயக்கம் ...
ரங்கோன் ராதா
Thumb
இயக்கம்ஏ. காசிலிங்கம்
தயாரிப்புமேகலா பிக்சர்சு
கதைமு. கருணாநிதி
இசைடி. ஆர். பாப்பா
நடிப்புசிவாஜி கணேசன்
பி. பானுமதி
ஒளிப்பதிவுஜி. துரை
படத்தொகுப்புகே. பெருமாள்
கலையகம்நேசனல் பிக்சர்சு
வெளியீடு1 நவம்பர் 1956
ஓட்டம்129 நிமி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
மூடு

திரைக்கதை

கோட்டையூர் தர்மலிங்க முதலியார், வெளியுலகிற்கு ஒரு உத்தமராகத் தோன்றும் ஒரு தந்திரமான மனிதர். ரங்கம், அவரது நல்லொழுக்கமுள்ள நீண்டகால மனைவி. தர்மலிங்க முதலியார் மனைவியின் தங்கை தங்கம் மீதும் ஒரு கண் வைத்திருந்தார். தங்கத்தைத் திருமணம் செய்து, சகோதரிகளின் ஏராளமான செல்வத்தை அடைய தர்மலிங்கம் முயற்சி செய்கிறார். ரங்கம் சில தீய ஆவிகளால் பாதிக்கப்பட்டு பைத்தியம் பிடித்திருப்பதாக அனைவரையும் நம்பச் செய்கிறார்.

நடிகர்கள்

துணை நடிகர்கள்
  • நம்பிராஜன்
  • தட்சிணாமூர்த்தி
  • தாமோதரன்
  • மோகனா
  • லட்சுமி அம்மாள்

தயாரிப்பு

1938 இல் பேட்ரிக் ஹாமில்டன் என்பவர் எழுதிய காஸ் லைட் என்ற கதை ஏஞ்சல் வீதி என்னும் பெயரில் பிராட்வேயில் நாடகமாக நடிக்கப்பட்டது. இக்கதையின் கருவினால் ஈர்க்கப்பட்ட அண்ணாதுரை ரங்கோன் ராதா கதையை எழுதினார்.[3] இதே கதை 1940-இல் காஸ்லைட் என்ற பெயரில் இங்கிலாந்தில் திரைப்படமாக வெளிவந்தது. இது பின்னர் 1944 இல் அமெரிக்காவில் ஜார்ஜ் கூகாரின் இயக்கத்தில் மீளத்தயாரிக்கப்பட்டது.[4] முந்தைய படங்களை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும். ரங்கோன் ராதா இந்தியப் பார்வையாளர்களைக் கவரும் வகையில் தயாரிக்கப்பட்டிருந்தது.

பாடல்கள்

டி. ஆர். பாப்பா இத்திரைப்படத்துக்கு இசையமைத்திருந்தார்.[5] பாடல் வரிகளை பாரதியார், பாரதிதாசன், உடுமலை நாராயணகவி, மு. கருணாநிதி, எம். கே. ஆத்மநாதன், என். எஸ். கிருஷ்ணன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகியோர் எழுதியிருந்தனர்.[6][7] பாடல்களை பானுமதி, என். எஸ். கிருஷ்ணன், சி. எஸ். ஜெயராமன், சீர்காழி கோவிந்தராஜன், டி. வி. ரத்தினம், டி. எஸ். பகவதி, பி. சுசீலா, ஏ. ஜி. ரத்னமாலா ஆகொயோர் பாடியிருந்தனர்.

மேலதிகத் தகவல்கள் எண்., பாடல் ...
எண்.பாடல்பாடியவர்(கள்)வரிகள்நீளம்
1"பொதுநலம் என்றும் பொதுநலம்"சி. எஸ். ஜெயராமன்மு. கருணாநிதி
2"தலைவாரிப் பூச்சூடி உன்னை"பானுமதிபாரதிதாசன்02:52
3"ஆயர்பாடி கண்ணா நீ ஆட வாராய் என்னோடு"டி. வி. ரத்தினம்மு. கருணாநிதி02:46
4"சங்கரியே காளியம்மா"என். எஸ். கிருஷ்ணன்என். எஸ். கிருஷ்ணன்03:48
5"பெண்ணாக இருந்த என்னை ...கையில் பிரம்பெடுத்து"பானுமதிஎம். கே. ஆத்மநாதன்03:49
6"என்றுதான் திருந்துவதோ"சி. எஸ். ஜெயராமன்உடுமலை நாராயணகவி03:36
7"ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா"டி. எஸ். பகவதிமகாகவி பாரதியார்02:35
8"தமிழே தேனே கண்ணே தாலேலோ"பானுமதிமு. கருணாநிதி03:25
9"ஊரடங்கும் வேளையிலே உள்ளம் கவரும் சோலையிலே"பி. சுசீலாபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்03:00
10"வான் மலர் சோலையில்.... காற்றில் ஆடும் முல்லைக்கொடியே"பானுமதிமு. கருணாநிதி03:25
11"நாட்டுக்கொரு வீரன்"சீர்காழி கோவிந்தராஜன், ஏ. ஜி. ரத்னமாலாபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்11:30
மூடு

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.