![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/98/Prambanan_Trimurti.jpg/640px-Prambanan_Trimurti.jpg&w=640&q=50)
யோகியாக்கார்த்தா சிறப்புப் பகுதி
From Wikipedia, the free encyclopedia
யோகியாக்கார்த்தா சிறப்புப் பகுதி (/ˌjɒɡjəˈkɑːrtə/ or /ˌjoʊɡjəˈkɑːrtə/;[4] இந்தோனேசிய மொழி: Daerah Istimewa Yogyakarta, or DIY) இந்தோனேசியாவிலுள்ள சிறப்புநிலை தன்னாட்சி மாகாணங்களில் ஒன்று. இதன் நிர்வாகத் தலைநகர் யோகியாக்கார்த்தா நகரம். தனி நிருவாகப் பகுதியானாலும் இது வரலாற்று அடிப்படையிலும் பண்பாட்டு அடிப்படையிலும் நடுச் சாவகத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படுகின்றது. சாவக இந்துப் புராணங்களிலுள்ள அயோத்தி நகரின் பெயரால் இது யோகியாக்கார்த்தா என வழங்கப்படுகின்றது.
விரைவான உண்மைகள் யோகியாக்கார்த்தா சிறப்புப் பகுதி Daerah Istimewa Yogyakarta, நாடு ...
யோகியாக்கார்த்தா சிறப்புப் பகுதி
Daerah Istimewa Yogyakarta | |
---|---|
சிறப்புப் பகுதி | |
![]() பிரம்பானான் கோயில், யோக்யகர்த்தா | |
குறிக்கோளுரை: Memayu Hayuning Bawana (சாவகம்) (மிகச்சரியான சமுதாயத்திற்கான நோக்கம்) சாவக எழுத்துமுறையில் | |
![]() இந்தோனேசியாவில் யோகியாக்கார்த்தாவின் அமைவிடம் | |
நாடு | இந்தோனேசியா |
தலைநகர் | யோக்யகர்த்தா |
அரசு | |
• ஆளுநர் (சுல்தான்) | பத்தாம் ஹமெங்குபுவோனோ |
• துணை ஆளுநர் (பாகு ஆலம்) | ஒன்பதாம் பாகு ஆலம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 3,133.15 km2 (1,209.72 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 33வது |
மக்கள்தொகை (2014)மாகாணக் கணிப்பு[1] | |
• மொத்தம் | 35,94,290 |
• தரவரிசை | 18வது |
மக்கள் வகைப்பாடு | |
• இனக்குழுக்கள் | சாவக மக்கள் (95.82%) சந்தனிய மக்கள் (0.56%) பிறர் (4.45%)[2] |
• சமயம் | இசுலாம் (91.4%) கிறித்தவம் (8.3%) இந்து, பௌத்தம் (0.3%)[3] |
• மொழிகள் | மத்தாரம் சாவகம் இந்தோனேசிய மொழி (இரண்டும் அலுவல்) |
நேர வலயம் | ஒசநே+7 (WIB) |
இணையதளம் | www.jogjaprov.go.id |
மூடு