மோதகம்
From Wikipedia, the free encyclopedia
மோடக்/மோதகம் (Modak) (மராத்தி: मोदक; Japanese; சப்பானிய மொழி: 歓 喜 団) என்பது பல இந்திய மாநிலங்கள் மற்றும் கலாச்சாரங்களில் பிரபலமான ஒருவகையான இந்திய இனிப்பு உணவாகும். இந்து புராணங்களின்படி, இது விநாயகரின் விருப்பமான உணவுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. எனவே விநாயகர் பூஜையின் போது பயன்படுத்தப்படுகிறது.[1] மோடக்கின் உட்புறத்தில் புதிதாக அரைக்கப்பட்ட தேங்காய் மற்றும் வெல்லம் கொண்டு நிரப்பப்படுகிறது. இதன் வெளிப்புற மென்மையான ஓடானது அரிசி மாவு அல்லது கோதுமை, மைதா மாவு கலந்து தயாரிக்கப்படுகிறது.
விரைவான உண்மைகள் வகை, பரிமாறப்படும் வெப்பநிலை ...
வகை | Dumpling |
---|---|
பரிமாறப்படும் வெப்பநிலை | dessert |
தொடங்கிய இடம் | இந்தியா |
பகுதி | மகராட்டிரம்-இந்தியா, Japan |
முக்கிய சேர்பொருட்கள் | அரிசி மாவு, அல்லது கோதுமை மாவு & மைதா மாவு, தேங்காய், வெல்லம் |
வேறுபாடுகள் | காங்கிடன் (歓喜団) |
மூடு
மோடக்கினை வறுத்தோ அல்லது வேகவைத்தோ தயாரிக்கலாம். வேகவைத்த மோடக் (உக்டிச் மோடக்) [2] பெரும்பாலும் நெய்யுடன் சூடாக உண்ணப்படுகிறது.