மேற்கு வங்காளத் துடுப்பாட்ட அணி
From Wikipedia, the free encyclopedia
ஐ பி எல் குறித்து அறிய, காண்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.
மேற்கு வங்காளத் துடுப்பாட்ட அணி (The Bengal cricket team ) என்பது மேற்கு வங்காளம் சார்பாக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடக்கூடிய இந்திய உள்ளூர் அணி ஆகும். இதன் உள்ளூர் மைதானம் ஈடன் கார்டன்ஸ் ஆகும். இந்த அணி ரஞ்சிக் கோப்பை தொடர்களில் இரண்டு முறை வாகையாளராகவும் 11முறை இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளது.[2]
விரைவான உண்மைகள் தனிப்பட்ட தகவல்கள், தலைவர் ...
தனிப்பட்ட தகவல்கள் | |
---|---|
தலைவர் | மனோஜ் திவாரி |
பயிற்றுநர் | சைரஜ் பதுல் |
உரிமையாளர் | மேற்கு வங்காளத் துடுப்பாட்ட வாரியம் |
அணித் தகவல் | |
நிறங்கள் | அடர் நீலம் மஞ்சள் |
உருவாக்கம் | 1908 |
உள்ளக அரங்கம் | ஈடன் கார்டன்ஸ் |
கொள்ளளவு | 66,349[1] |
வரலாறு | |
இரஞ்சிக் கோப்பை வெற்றிகள் | 2 |
விஜய் அசாரே கோப்பை வெற்றிகள் | 1 |
சையது முஷ்டாக் அலி கோப்பை வெற்றிகள் | 1 |
அதிகாரபூர்வ இணையதளம்: |
மூடு
மார்ச் 12, 2012 இல் பெரோசா கோட்லா விளையாட்டரங்கத்தில் மும்பை துடுப்பாட்ட அணிக்கு எதிரான விஜய் அசாரே கோப்பையின் இறுதி ஆட்டத்தில் சௌரவ் கங்குலி தலைமையிலான மேற்கு வங்காள அணி வெற்றி பெற்றது.[3]