மேற்கு மிட்னாபூர் மாவட்டம்
மேற்கு வங்காளத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
மேற்கு மிட்னாபூர் மாவட்டம் (West Midnapore district or Paschim Medinipur district) (Pron: pɔʃʧɪm med̪iːniːpur) (Pron: ˌmɪdnəˈpʊə) (வங்காள மொழி: পশ্চিম মেদিনীপুর জেলা),இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தின் 23 மாவட்டங்களில் ஒன்றாகும். வர்தமான் கோட்டத்தில் அமைந்த 9 மாவட்டங்களில் இம்மாவட்டமும் ஒன்றாகும். இம்மாவட்ட நிர்வாகத் தலைமையிடம் மிட்னாபூர் நகரமாகும். மிட்னாபூர் மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக 1 சனவரி 2002-இல் இரண்டாக பிரிக்கும் போது மேற்கு மிட்னாபூர் மாவட்டம் உருவானது.
மேற்கு மிட்னாபூர்மாவட்டத்தின் இடஅமைவு மேற்கு வங்காளம் | |
மாநிலம் | மேற்கு வங்காளம், இந்தியா |
---|---|
நிர்வாக பிரிவுகள் | வர்தமான் |
தலைமையகம் | மிட்னாபூர் |
பரப்பு | 9,368 km2 (3,617 sq mi) |
மக்கட்தொகை | 5,913,457 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 631/km2 (1,630/sq mi) |
நகர்ப்புற மக்கட்தொகை | 11.9% |
படிப்பறிவு | 78.00% |
பாலின விகிதம் | 966 |
மக்களவைத்தொகுதிகள் | 4 |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | 19 |
முதன்மை நெடுஞ்சாலைகள் | 2 |
சராசரி ஆண்டு மழைபொழிவு | 2,111 mm |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
9,368 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் கரக்பூர், மிட்னாபூர் சதர், காட்தல் மற்றும் ஜார்கிராம் என நான்கு உட்கோட்டங்களை கொண்டது. மாவோயிஸ்ட் தீவிரவாதிகளால் பாதிக்கப்படும் இந்திய மாவட்டங்களில் ஒன்றாக மேற்கு மிட்னாபூர் மாவட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.[1]