மேசை மலை
From Wikipedia, the free encyclopedia
மேசை மலை (Table Mountain, கோய்கோய் மொழி: ஹோரிக்வாகோ, ஆபிரிக்கான மொழி: டாபெல்பெர்கு) தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரத்திற்கு அருகிலுள்ள, முதன்மையான அடையாளச் சின்னமாக உருவாகியுள்ள தட்டைப் பரப்பு மலை ஆகும். இது கேப் டவுன் கொடியிலும் மற்ற அரசு சின்னங்களிலும் இடம் பெற்றுள்ளது.[2] குறிப்பிடத்தக்க சுற்றுலா ஈர்ப்புள்ள இந்த மலையில் வருகையாளர்களுக்காக தொங்கூர்திகள் அமைக்கப்பட்டுள்ளன; மலைநடை செல்வோருக்கும் தடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. மேசை மலைத் தேசியப் பூங்காவின் அங்கமாக இந்த மலை உள்ளது.
விரைவான உண்மைகள் மேசை மலை, உயர்ந்த புள்ளி ...
மேசை மலை | |
---|---|
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 1,084.6 m (3,558 அடி)[1] |
புடைப்பு | 1,055 m (3,461 அடி) |
ஆள்கூறு | 33°57′26.33″S 18°24′11.19″E |
புவியியல் | |
கேப் டவுன், தென்னாப்பிரிக்கா | |
நிலவியல் | |
பாறையின் வயது | சிலுரியக் காலம்/ஓர்டோவிசியக் காலம் |
மலையின் வகை | மணற்கல் |
ஏறுதல் | |
முதல் மலையேற்றம் | அன்டோனியா டெ சல்தான்கா, 1503 |
எளிய வழி | பிளேட்க்ளிப் கோர்ஜ் |
மூடு