மூலவர்
இந்து ஆலயங்களின் கர்ப்பக்கிருகத்தில் பிரதிஷ்டை செய்யப்படும் மூர்த்தியாகும். / From Wikipedia, the free encyclopedia
மூலவர் இந்து ஆலயங்களின் கர்ப்பக்கிருகத்தில் பிரதிஷ்டை செய்யப்படும் மூர்த்தியாகும். பொதுவாக கருங்கல்லினாலேயே மூலவர் அமைக்கப்பட்டிருப்பார். சிவன் கோயில்களில் சிவலிங்கமே மூலவராக அமைவது மரபு. மூலவரின் பெயர் கொண்டே அந்த ஆலயங்கள் அழைக்கப்படுகின்றன. பொதுவாக மூலவர் பூஜை நடைபெறும் வேளைகளிலே காட்சி தருவார். சில கோயில்களில் மூலவரே உற்சவராகவும் இருப்பார். இந்த மூலவரையே விழாக்காலங்களில் உற்சவராகவும் எடுத்துச் செல்வர். இந்த விக்ரகமானது சகட விக்கிரகம் என்று அழைக்கப்படும். [1]
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |