முகம்மது நபி
இசுலாமிய சமயத்தின் நிறுவனர் மற்றும் முக்கிய நபிமார் (பொ.ஊ.. 570-632) / From Wikipedia, the free encyclopedia
முகம்மது நபி அல்லது முகம்மது (Muḥammad, அரபு மொழி: محمد, பிறப்பு பொ.ஊ. 570, இறப்பு 8 சூன் பொ.ஊ. 632 கணிப்பு[1]), அராபியப் பெயர்: அபூ அல்-காசிம் முகம்மது இப்னு அப்தல்லா இப்னு அப்தல்-முத்தலிப் இப்னு ஹாசிம் (Abū al-Qāsim Muḥammad ibn ʿAbd Allāh ibn ʿAbd al-Muṭṭalib ibn Hāshim, ابو القاسم محمد ابن عبد الله ابن عبد المطلب ابن هاشم) என்பவர் மக்கா நகரைச் சேர்ந்த அராபியர் ஆவர் .இவர் மத ,சமூக ,அரசியல் தலைவரும் ,இசுலாமிய மதத்தின் நிறுவுனரும் ஆவர். அராபியத் தீபகற்பம் முழுமையையும் இசுலாம் என்ற ஒரே கொள்கைச் சமயத்தின் கீழ் கொண்டு வந்தவர். இவர் முஸ்லிம்களால் மட்டுமல்லாமல் பாபிஸ்துகள் மற்றும் பகாய் சமயத்தவர்களாலும் கடவுளின் திருத்தூதர் என்று போற்றப்படுகிறார். உலக அளவில் முசுலிம்கள் முகம்மதுவை கடவுளால் மனித உலகிற்கு அனுப்பப்பட்ட கடைசி இறைத்தூதர் என நம்புகின்றனர்.[2] இசுலாமிய மதக்கோட்பாட்டின் படி,ஆதம் ,இப்றாகீம் ,மூசா,ஈசா மற்றும் பிற இறைதூதர்களால் கற்பிக்கப்பட்ட ஓரிறைக்கொள்கையை (தவ்ஹீதை) உறுதி செய்யவும் ,போதிக்கவும் முகம்மது நபி இறைவஉந்துதலுக்கு உள்ளாக்கப்பட்டார் .[3][4][5] இறைத்தூதர்களின் முத்திரையாக இவர் நம்பப்படுகின்றார்.திருக்குர்ரான் மற்றும் இவரது போதனைகளும் செயற்பாடுகளும் இசுலாமிய மதக்கோட்பாட்டின் அடிப்படையாக உள்ளது .
முகம்மது இசுலாத்தின் தீர்க்கதரிசி | |||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறப்பு | முகம்மது இப்னு அப்துல்லா கணிப்பு பொ.ஊ. 570 மக்கா (இன்றைய சவூதி அரேபியாவில்) | ||||||||||||||||||||||||||||
இறப்பு | 8 சூன் 632(632-06-08) (அகவை 62) மதீனா, அரேபியா (இன்றைய மதீனா, ஹிஜாஸ், சவூதி அரேபியா) | ||||||||||||||||||||||||||||
மற்ற பெயர்கள் |
| ||||||||||||||||||||||||||||
இனம் | அரபு | ||||||||||||||||||||||||||||
செயற்பாட்டுக் காலம் | |||||||||||||||||||||||||||||
பின்வந்தவர் |
| ||||||||||||||||||||||||||||
எதிரி(கள்) | அபு ஜஹில் அபு லஹப் உம் ஜமில் | ||||||||||||||||||||||||||||
சமயம் | இசுலாம் | ||||||||||||||||||||||||||||
பெற்றோர் | தந்தை: அப்துல்லா இப்னு அப்துல்-முத்தலிப் தாய்: ஆமினா பின்த் வாகுப் | ||||||||||||||||||||||||||||
வாழ்க்கைத் துணை |
| ||||||||||||||||||||||||||||
பிள்ளைகள் |
|
முகம்மது நபி ஒரு கணிப்பின் படி பொ.ஊ. 570இல் சவூதி அரேபியாவில் மக்கா நகரில் பிறந்தார்[6][7][8]. இவருடைய தந்தை அப்துல்லாஹ் மற்றும் தாயார் ஆமினா ஆவார்கள். சிறு வயதிலேயே பெற்றோர்களை இழந்து தம் சிறிய தந்தை அபூ தாலிபிடம் வளர்ந்து வந்தார். இவரது 40ஆவது வயதில் நபித்துவம் பெற்று இறைத்தூதுகள் கிடைக்கத் துவங்கின. அதன் பின்னர் அவர் வாழ்ந்த மிகக் குறுகிய காலமாகிய 23 ஆண்டுகளிலேயே வியத்தகு மாற்றங்களை நிகழ்த்திக் காட்டினார் முகம்மது நபி.