முன்கழுத்துக் கழலை
From Wikipedia, the free encyclopedia
முன்கழுத்துக் கழலை அல்லது கண்டக்கழலை (Goitre) என்பது தைராய்டு சுரப்பி பெரிதாவதால் கழுத்தில் தொண்டைப் பகுதிக்குக் கீழே ஏற்படும் வீக்கமாகும்.[1].[2] இது பெரும்பாலும் அயோடின் குறைபாட்டின் விளைவாகவே ஏற்படுகிறது. சில வேளைகளில் உணவுப் பழக்கவழக்கங்கள் காரணமாகவும் சிலரிடையே தோன்றுவதாகவும் அறியப்பட்டுள்ளது. தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாததால் முன்கழுத்துக் கழலை உருவாகிறது. உலக அளவில் 90% முன்கழுத்துக் கழலை நோய்கள் அயோடின் குறைபாட்டால் ஏற்படுகிறது.[3] அவை பெரும்பாலும் தீங்கற்ற கட்டிகளாகவே உள்ளன.