முதுமை
From Wikipedia, the free encyclopedia
முதுமை (Old age) என்பது மனிதர்களின் ஆயுட்காலம் நெருங்கி வருவதை அல்லது அடையக்கூடிய காலத்தைக் குறிக்கிறது இதனால் மனிதனின் முடிவு என்பது வாழ்க்கை வட்டம் என் அறிய முடிகிறது. பொதுவாக "வயதானவர்கள்" , "முதியவர்கள்" (உலகளாவிய பயன்பாடு), "மூத்தவர்கள்" (அமெரிக்க பயன்பாடு) , "மூத்த குடிமக்கள்" , (பிரித்தானிய மற்றும் அமெரிக்கன் பயன்பாடு) , "வயது வந்தவர்கள்" (சமூகம்)[1]), மற்றும் "மூப்பர்கள்" (பல கலாச்சாரங்களில் - பழங்குடி மக்களின் கலாச்சாரங்கள் உட்பட) என்றெல்லாம் இவர்களை அழைப்பதுண்டு
"முதியவர்கள்" பெரும்பாலும் குறைவான மீளுருவாக்கம் திறன்களை கொண்டிருக்கிறார்கள் , இளையவர்களை விட காயங்கள் மற்றும் நோய்களால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர், கரிம செயல்முறைகள் முதுமையடைதல் என்பது உயிரியல் முதிர்ச்சி என்று அழைக்கப்படுகிறது,[2] முதுமையடைதல் மருத்துவ ஆய்வுகளின்படி மரபியல் ஆகும்,[3] வயதானவர்களைத் தொந்தரவு செய்யும் நோய்களின் ஆய்வு, "மூப்பியல் மருத்துவம்" என அழைக்கப்படுகிறது[4] அவர்கள் பணி ஓய்வு, தனிமையுணர்வு, மற்றும் தலைமுறைப் பாகுபாடு போன்ற பல சமூகப் பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர்.[5] வயதானவர்கள் நிறைய நோய் அறிகுறிகளுடன் உள்ளனர். உதாரணமாக, சுகாதாரத்திற்கு ஆரோக்கியமான எலும்புகள் முக்கியமானவை. வயதான காலத்தில், நமது உடல் பழைய எலும்பு திசுக்களை உறிஞ்சத் தொடங்கி புதிய எலும்பு திசுக்களை உருவாக்கும் , அதே சமயம், எலும்புகள் மெல்லிய மற்றும் பலவீனமாக இருக்கும் , இது எலும்புப்புரை எனப்படும் ஒரு நிலைக்கு வழிவகுக்கிறது, எலும்புகள் மிகவும் பலவீனமாகின்றன, கீழே விழும்போது எளிதில் உடையலாம் அல்லது அன்றாட இயக்கங்களின் போது கூட எளிதில் உடையலாம். எலும்புப்புரை காரணமாக ஒவ்வொரு ஆண்டும் 1.5 மில்லியனுக்கும் அதிகமான எலும்பு முறிவுகள் ஏற்படுகின்றன.[6]
வயது முதிர்வு என்பது ஒரு திட்டவட்டமான உயிரியல் நிலை அல்ல, ஏனெனில் "வயதானவர்கள்" எனக் குறிப்பிடப்படுவது காலவரிசை வயது பண்பாடு மற்றும் வரலாற்று ரீதியாக மாறுபடுகிறது.[7] 2011 ல், ஐக்கிய நாடுகள் அவை மனித உரிமைகள் மாநாட்டில் குறிப்பாக முதியவர்களைப் பாதுகாக்கும் முறையை முன்வைத்தது.[8]