முதல்வன் (திரைப்படம்)
ஷங்கர் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் / From Wikipedia, the free encyclopedia
முதல்வன் (Mudhalvan) 1999 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்து மிகப் பெரும் வெற்றி பெற்ற இத்திரைப்படத்தில் அர்ஜூன், மனிஷா கொய்ராலா, சுஷ்மிதா சென், வடிவேல் மற்றும் பலர் நடித்திருந்தனர். இதே திரைப்படம் டப்பிங்கில் தெலுங்கில் வெளிவந்தது. இத்திரைப்படம் ஹிந்தியில் நாயக் எனப் பெருமளவு செலவில் மறு தயாரிப்பு செய்யப்பட்டது.
விரைவான உண்மைகள் முதல்வன், இயக்கம் ...
முதல்வன் | |
---|---|
![]() | |
இயக்கம் | ஷங்கர் |
தயாரிப்பு | ஷங்கர் ரமணா மாதேஷ் |
கதை | சுஜாதா ஷங்கர் |
இசை | ஏ. ஆர். ரஹ்மான் |
நடிப்பு | அர்ஜூன் மனிஷா கொய்ராலா சுஷ்மிதா சென் ரகுவரன் மணிவண்ணன் வடிவேல் லைலா கொச்சின் ஹனீஃபா விஜயகுமார் |
ஒளிப்பதிவு | கே. வி. ஆனந்த் |
படத்தொகுப்பு | பி. லெனின் வி. டி. விஜயன் |
கலையகம் | எஸ். பிலிம்ஸ் |
வெளியீடு | நவம்பர் 7, 1999 (1999-11-07) |
ஓட்டம் | 178 நிமிடங்கள் |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
மூடு
ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில் கவிஞர் வைரமுத்து பாடல்களை எழுதினார். [1][2] கே.வி. ஆனந்து ஒளித்தொகுப்பையும் எழுத்தாளர் சுஜாதா வசனமும் எழுதினர்.[3] இத் திரைப்படம் 2000 ஆம் ஆண்டு தமிழில் சிறந்த திரைப்படத்துக்கான ஃபிலிம்பேர் விருது பெற்றது.