From Wikipedia, the free encyclopedia
மிர்பூர் (Mirpur,வங்காள மொழி: মীরপুর/মিরপুর) வங்காளதேசத்தின் தலைநகர் தாக்காவின் உள்மாவட்டங்களில் ஒன்றாகும். இதனைச் சுற்றி வடக்கில் பல்லவி தாணா, தெற்கில் மொகமதுப்பூர் தாணா, கிழக்கில் காஃப்ருல் தாணா, மற்றும் மேற்கில் சாவார் உள்ளன.[1]
மிர்பூர்
মীরপুর (মিরপুর) | |
---|---|
உள் மாவட்டம் (தாணா) | |
நாடு | வங்காளதேசம் |
கோட்டம் | தாக்கா கோட்டம் |
மாவட்டம் | தாக்கா மாவட்டம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 58.66 km2 (22.65 sq mi) |
மக்கள்தொகை (2007) | |
• மொத்தம் | 10,74,232 |
• அடர்த்தி | 16,838/km2 (43,610/sq mi) |
நேர வலயம் | ஒசநே+6 (வ.சீ.நே) |
அஞ்சல் குறியீடு | 1216 |
இணையதளம் | மிர்பூர் தாணாவின் அலுவல்முறையான நிலப்படம் |
மிர்பூர் 23.8042°N 90.3667°Eஇல் அமைந்துள்ளது. 58.66 km2 (22.65 sq mi) பரப்பளவில் டாக்கா நகரத்தின் வட-கிழக்கில் இது அமைந்துள்ளது.
அசரத் ஷா அலி போக்தாதி மிர்பூரின் குறிப்பிடத்தக்க மனிதர் ஆவார். பாக்தாத் நகரிலிருந்து இங்கு புலம் பெயர்ந்தவர். 2000ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இதன் மக்கள்தொகை 1,074,232 ஆகும். இதில் ஆண்கள் 54.15% பெண்கள் 45.85% ஆகும்.[2] 610,270 நபர்கள் 18 அகவைக்கு மேலானவர்கள். சராசரி கல்வியறிவு 68.9% (7+ அகவைகள்) ஆக உள்ளது; இது தேசிய சராசரியான 48.6%ஐ விடக் கூடுதலாக உள்ளது. அண்மையில்தான் மிர்பூர் தாணா சீரமைக்கப்பட்டு ஷா அலி, பல்லவி மற்றும் காஃப்ருல் என மூன்று தாணாக்கள் பிரிக்கப்பட்டுள்ளன.[3]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.