மால்சிக்
From Wikipedia, the free encyclopedia
மால்சிக் (Malchik; உருசிய மொழி: Мальчик, பொருள்: 'குட்டிப் பையன்'; சு. 1996 – டிசம்பர் 2001) உருசியாவின் மாஸ்கோவில் வசித்த ஒரு கறுப்பு நிறக் கலப்பினத் தெரு நாய். சுமார் மூன்று ஆண்டுகளாக மாஸ்கோ மெட்ரோ தடத்தில் மெண்டலீவ்ஸ்காயா நிலையத்தில் மால்சிக் வசித்து வந்தது. 2001 ஆம் ஆண்டு யூலியானா உரோமானோவா என்ற 22 வயதுப் பெண் தான் எடுத்துவந்த சமையலறைக் கத்தி ஒன்றால் குத்தியதில் மால்சிக் கொல்லப்பட்டது.[1] இந்த சம்பவம் பொதுமக்களின் சீற்றத்தை பெருமளவில் தூண்டி மனிதர்கள் விலங்குகளை நடத்தும் விதம் தொடர்பான கேள்விகளை முன்னெழுப்பியது. இதன் தொடர்ச்சியாக 2007 ஆம் ஆண்டு மெண்டலீவ்ஸ்காயா நிலையத்தில் மல்சிக்கின் நினைவாக ஒரு நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டது.[2]
விரைவான உண்மைகள் மால்சிக், இனம் ...
மால்சிக் | |
---|---|
2019-ஆம் ஆண்டு உருசிய தபால் தலையில் "கம்பாஷன்" நினைவுச்சின்னம் | |
இனம் | நாய் |
வகை | கலப்பினம் |
பால் | ஆண் |
பிறப்பு | சு. 1996 மாஸ்கோ, உருசியா |
இறப்பு | திசம்பர் 2001 மாஸ்கோ, உருசியா |
நாடு | உருசியா |
Occupation | இரயில் நிலைய வாசி |
செயற்பட்ட ஆண்டுகள் | 1996–2001 |
அறியப்படுவதற்கான காரணம் | மெண்டலீவ்ஸ்காயா இரயில் நிலையத்தில் வசித்து வந்த நன்கறியப்பட்ட நாய்; ஒரு பயணியால் குத்திக் கொல்லப்பட்டது |
Appearance | கறுப்பு |
மூடு