![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/b8/The_Malolos_Cityhall.jpg/640px-The_Malolos_Cityhall.jpg&w=640&q=50)
மாலோலோசு
From Wikipedia, the free encyclopedia
மாலோலோசு (Malolos), அலுவல்முறையாக மாலோலோசு நகரம் (பிலிப்பினோ: லுங்சோடு ங்கு மாலோலோசு), பிலிப்பீனியக் குடியரசின் முதல்தர[4] நகரமாகும். மாலோலோசு நாட்டின் 115வது நகரமாகக் கருதப்படுகின்றது.[5] இது பிலிப்பீனிய மாநிலமான புலகனின் தலைநகரமாக விளங்குகின்றது.
மாலோலோசு | |
---|---|
நகரம் | |
![]() மாலோலோசு நகர மன்றம் | |
அடைபெயர்(கள்): பிலிப்பீனியக் குடியரசின் தொட்டில் | |
குறிக்கோளுரை: மாலோலோசு மறுமலர்ச்சி நகரம் | |
![]() புலகன் மாநிலத்தில் அமைவிடம் | |
நாடு | பிலிப்பீன்சு |
மண்டலம் | மத்திய லூசோன் (மண்டலம் III) |
மாநிலம் | புலகன் |
நாடாளுமன்ற மாவட்டம் | புலகனின் முதல் மாவட்டம் |
என்கொமின்டா | நவம்பர் 14, 1571 |
நகரம் | சூன் 11, 1580 |
நகரத்தகுதி | திசம்பர் 18, 1999 |
பரங்கேக்கள் | 51 |
அரசு | |
• உறுப்பினர், முதலாவது நாடாளுமன்ற மாவட்டம் | விக்டோரியா ஆர். சி-அல்வராடோ (தே.ஐ.க) |
• ஆளுநர் | வில்கெல்மினோ எம். சி-அல்வராடோ (தே.ஐ.க) |
• மேயர் | கிறிஸ்டியன் டி. நாடிவிடாடு (லிபரல் கட்சி) |
• உதவி மேயர் | கில்பெர்ட்டு டி. கட்சாலியன் (லிபரல்) |
பரப்பளவு | |
• மொத்தம் | 77.25 km2 (29.83 sq mi) |
• நிலம் | 67.25 km2 (25.97 sq mi) |
ஏற்றம் | 19.4 m (63.6 ft) |
மக்கள்தொகை (2010)[3] | |
• மொத்தம் | 2,34,945 |
• அடர்த்தி | 3,493.6/km2 (9,048/sq mi) |
நேர வலயம் | ஒசநே+8 (PST) |
ZIP code | 3000 |
Dialing code | 44 |
Economy | First Class |
• Income | ![]() |
• Expenses | ![]() |
• Assets | ![]() |
இணையதளம் | http://www.maloloscity.gov.ph/ |
பிலிப்பீன்சின் தலைநகரமான மணிலாவிற்கு வடக்கே 45 கிலோமீட்டர்கள் (28 mi) தொலைவில் மாலோலோசு நகரம் அமைந்துள்ளது. மணிலா பெருநகரப்பகுதியில் அடங்கியுள்ள முதன்மை புறநகர் பகுதியாக இது விளங்குகின்றது. மத்திய லூசோன் மண்டலத்தில் லூசோன் தீவில் புலகன் மாநிலத்தின் தென்மேற்குப் பகுதியில் இந்நகர் அமைந்துள்ளது. மணிலா விரிகுடாவின் வட-கிழக்கு கரையோரத்தில் மாலோலோசு அமைந்துள்ளது.
1898இல் அரசியலமைப்புப் பேராயம் இங்குதான் கூடி முதலாவது பிலிப்பைன் குடியரசு நிறுவக் காரணமாயிற்று. எனவே ஆசியாவின் முதல் அரசமைப்புச் சட்டம் சார்ந்த குடியரசு இங்குதான் நிறுவப்பட்டது என்ற பெருமை உடையது.