மாரிட்சா
ஐரோப்பிய ஆறு From Wikipedia, the free encyclopedia
ஐரோப்பிய ஆறு From Wikipedia, the free encyclopedia
மாரிட்சா (Maritsa, பல்கேரிய: Марица [mɐˈrit͡sɐ] ), Meriç ( துருக்கியம்: Meriç ) என்றும் அழைக்கப்படுகிறது [meɾit͡ʃ] ) மற்றும் Evros ( கிரேக்கம்: Έβρος [ˈevros] ) என்பது தென்கிழக்கு ஐரோப்பாவில் பால்கன் குடா வழியாக ஓடும் ஒரு ஆறு ஆகும். இது இலத்தீன் மொழியில் ஹெப்ரஸ் என்று அழைக்கப்பட்டது. இதன் நீளம் 480 km (300 mi) ஆகும்.[3] இது பால்கன் தீபகற்பத்தின் உட்பகுதியில் மட்டுமே ஓடும் மிக நீளமான ஆறாகும். மேலும் நீர் வெளியேற்றத்தின் அடிப்படையில் இது ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய ஆறாகும். இது பல்காரியா வழியாக அதன் மேல் மற்றும் நடுப்பகுதிகளில் பாய்கிறது, அதே நேரத்தில் இதன் கீழ் பாதை கிரேக்கத்திற்கும் துருக்கிக்கும் இடையிலான பெரும்பகுதி எல்லையாக உள்ளது. இதன் வடிகால் பகுதி சுமார் 53,000 km2 (20,000 sq mi) ஆகும், இதில் 66.2% பல்கேரியாவிலும், 27.5% துருக்கியிலும், 6.3% கிரேக்கத்திலும் உள்ளது.[1] இது திரேசின் வரலாற்றுப் பகுதியின் முக்கிய ஆறாகும். இதன் பெரும்பாலான பகுதிகள் இதன் வடிகால் படுகையில் உள்ளது.
Maritsa Évros, Meriç | |
---|---|
ரிலா மலைகளில் உள்ள மரிட்சா ஆற்றின் தோற்றப் பகுதி | |
பெயர் | Error {{native name}}: an IETF language tag as parameter {{{1}}} is required (help) |
அமைவு | |
நாடுகள் | |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | |
⁃ அமைவு | Rila Mountains, Bulgaria |
⁃ ஏற்றம் | 2,378 m (7,802 அடி) |
முகத்துவாரம் | |
⁃ அமைவு | ஏஜியன் கடல், 14.5 km (9.0 mi) east of Alexandroupoli |
⁃ ஆள்கூறுகள் | 40°43′50″N 26°2′6″E |
நீளம் | 480 km (300 mi) |
வடிநில அளவு | 53,000 km2 (20,000 sq mi)[1] |
வெளியேற்றம் | |
⁃ சராசரி | for mouth 234 m3/s (8,300 cu ft/s)[2] |
இது பல்கேரியாவில் உள்ள ரிலா மலைகளில் தோன்றுகிறது. பின்னர் கிழக்கு-தென்கிழக்கில் பால்கன் மலைகள் மற்றும் ரோடோப் மலைகளுக்கு இடையில் பாய்ந்து, ப்லோவ்டிவ் மற்றும் டிமிட்ரோவ்கிராட் மற்றும் துருக்கியில் எடிர்னே வரை பாய்கிறது. பல்கேரியாவின் ஸ்விலென்கிராட்டின் கிழக்கே, ஆறு கிழக்கு நோக்கி பாய்கிறது, பல்கேரியா (வடக்கரை) மற்றும் கிரேக்கம் (தென் கரை), பின்னர் துருக்கி மற்றும் கிரேக்கம் இடையே எல்லையாக அமைந்து எல்லையை உருவாக்குகிறது. எடிர்னில் ஆறானது துண்ட்ஷா மற்றும் அர்டா ஆகிய இரண்டு முக்கிய துணை ஆறுகளை தன்னோடு சேர்த்துக் கொண்டு இரு கரைகளையும் துருக்கியப் பகுதிகளாக கொண்டு துருக்கியி வழியாக பாய்கிறது. பின்னர் இது தெற்கே திரும்பி, மேற்குக் கரையில் கிரேக்கத்துக்கும், கிழக்குக் கரையில் துருக்கிக்கும் இடையேயான எல்லையாக ஏஜியன் கடல் வரை உள்ளது. இந்து எனேஸ் அருகே நுழைந்து ஆற்றுக் கழிமுகத்தை உருவாக்குகிறது. பல்கேரியாவின் மேல் மரிட்சா பள்ளத்தாக்கில் கிழக்கு-மேற்கு நீர்வழிப்பாதையாக இந்த ஆறு உள்ளது. பிற இடங்களில் போக்கு வரத்துக்கு வாய்ப்பளிக்காத இந்த ஆறு மின் உற்பத்திக்கும், பாசனத்துக்கும் பயன்படுகிறது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.