மாராங்
From Wikipedia, the free encyclopedia
மாராங்; (ஆங்கிலம்: Marang; மலாய்: Marang) என்பது மலேசியா, திராங்கானு மாநிலத்தில், மாராங் மாவட்டத்தில் (Marang District) உள்ள ஒரு நகரம் ஆகும். திராங்கானு மாநிலத்தின் தலைநகரான கோலா திராங்கானு (Kuala Terengganu) மாநகரில் இருந்து 16 கி.மீ. தொலைவில் தெற்கில் உள்ளது.
விரைவான உண்மைகள் மாராங், நாடு ...
மாராங் | |
---|---|
Marang Town | |
திராங்கானு | |
ஆள்கூறுகள்: 5°12′0″N 103°13′12″E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | திராங்கானு |
மாவட்டம் | மாராங் |
நகரம் | மாராங் |
தொகுதி | மாராங் மக்களவைத் தொகுதி |
மாநகராட்சி | கோலா திராங்கானு மாநகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 662 km2 (256 sq mi) |
மக்கள்தொகை (2015)[1] | |
• மொத்தம் | 99,043 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 216xx |
தொலைபேசி | +6-09 |
போக்குவரத்து எண் | T |
இணையதளம் | mdm |
மூடு
இந்த நகரம் தென் சீனக் கடற்கரையில் (South China Sea), கோலா திராங்கானு நகருக்கும் பகாங், குவாந்தான் (Kuantan) நகருக்கும் இடையிலான கிழக்கு கடற்கரை விரைவுச்சாலையின் (East Coast Expressway) அருகில் அமைந்துள்ளது. இந்த நகரத்தின் முக்கியப் பொருளாதார நடவடிக்கைகள் மீன்பிடித்தல் மற்றும் சுற்றுலாத் துறை ஆகும்.