From Wikipedia, the free encyclopedia
மலேசிய நிதி அமைச்சு (மலாய்: Kementerian Kewangan Malaysia; ஆங்கிலம்: Ministry of Finance, Malaysia) (MOF) என்பது மலேசிய அரசாங்க அமைச்சுகளில் ஒன்றாகும். அரசாங்கச் செலவுகள் (Government Expenditure); மற்றும் வருவாயை உயர்த்துதல் (Government Revenue Raising) ஆகிய நிதி விவகாரங்களைக் கவனிக்கும் முக்கியப் பொறுப்புகளை வகிக்கிறது.[1]
Kementerian Kewangan Ministry of Finance (MOF) | |
மலேசிய நிதி அமைச்சகம் | |
துறை மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | 31 ஆகத்து 1957 |
ஆட்சி எல்லை | மலேசிய அரசாங்கம் |
தலைமையகம் | Ministry of Finance Complex, No. 5, Persiaran Perdana, Precinct 2, Federal Government Administrative Centre, 62592 புத்ராஜெயா |
பணியாட்கள் | 21,745 (2019) |
ஆண்டு நிதி | MYR 9,805,756,000 (2021) |
அமைச்சர் |
|
பொறுப்பான துணை அமைச்சர்கள் |
|
அமைப்பு தலைமைகள் |
|
வலைத்தளம் | www.mof.gov.my |
அடிக்குறிப்புகள் | |
முகநூலில் மலேசிய நிதி அமைச்சு |
பொருளாதாரக் கொள்கையை (Economic Policy) உருவாக்குவதும்; மலேசிய வரவு-செலவு மதிப்பீட்டுத் திட்டத்தைத் (Malaysian Federal Budget) தயாரிப்பதும் இந்த அமைச்சின் முக்கியப் பங்காகும். அத்துடன் நிதித் துறை சார்ந்த சட்டங்கள் (Financial Legislation) மற்றும் நிதி ஒழுங்குமுறைகளையும் (Financial Regulation) மேற்பார்வை செய்கிறது. இந்த அமைச்சின் தலைமையகம் புத்ராஜெயாவின் நிதி அமைச்சக வளாகத்தில் (Ministry of Finance Complex) உள்ளது.
மலேசியாவின் மிக முக்கியமான அமைச்சுகளுள் ஒன்றாகக் கருதப்படும் இந்த நிதி அமைச்சின் தலைவர் நிதி அமைச்சர் எனப்படுவார். ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதத்தில், நிதியமைச்சர் மலேசிய நடுவண் அரசாங்கத்தின் வருடாந்திர வரவு-செலவு மதிப்பீட்டுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார்.
மலேசியப் பணவியல் கொள்கையை (Monetary Policy); மலேசியாவின் மத்திய வங்கியான மலேசிய நடுவண் வங்கி (Central Bank of Malaysia) கையாள்கிறது. இந்த நடுவண் வங்கியின் தலைவரை யாங் டி பெர்துவான் அகோங் (Yang di-Pertuan Agong) எனும் மலேசியப் பேரரசர் நியமிக்கிறார்.
நிதியமைச்சர் பதவி மிகவும் மூத்த அரசு பதவியாகக் கருதப்படுகிறது. வரலாற்று ரீதியாக முன்பு, நிதி அமைச்சர் பதவியை வகித்தவர்கள் மலேசியப் பிரதமர் அல்லது மலேசிய துணைப் பிரதமராக பணியாற்றி இருக்கிறார்கள்.
நிதி அமைச்சராகப் பணியாற்றுவது பிரதமராகப் பொறுப்பு ஏற்பதற்கான முக்கியத் தகுதியாகக் கருதப்பட்டாலும் அது அவசியம் அல்ல. நிதி அமைச்சர் பதவியை வகிக்காமலேயே ஒருவர் மலேசிய நாட்டின் பிரதமராக முடியும். இன்றுவரை ஐந்து மலேசிய நிதி அமைச்சர்கள் மலேசியப் பிரதமராக பதவி வகித்து உள்ளனர்.
அரசாங்கச் செலவுகள்; அரசாங்க வருவாய் உயர்த்துதல்; பொருளாதாரக் கொள்கை; வரவு-செலவு மதிப்பீட்டுத் திட்டம்; நிதித் துறை சார்ந்த சட்டங்கள்; நிதி ஒழுங்குமுறைகள் சார்ந்த சட்டப் பொறுப்புகள், இந்த அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.