தாவர இனம் From Wikipedia, the free encyclopedia
மரு ஊமத்தை | |
---|---|
மருளூமத்தை | |
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Xanthium |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/XanthiumX. strumarium |
இருசொற் பெயரீடு | |
Xanthium strumarium லி. | |
Subspecies | |
see text | |
வேறு பெயர்கள் [1] | |
பட்டியல்
|
மரு ஊமத்தை அல்லது மருளூமத்தை (Xanthium strumarium, rough cocklebur, clotbur, common cocklebur, large cocklebur, woolgarie bur) என்பது சூரியகாந்திக் குடும்பத்தைச் சேர்ந்த ஆண்டுத் தாவர இனமாகும். [2] இது வட அமெரிக்காவில் தோன்றி உலகின் வேறு இடங்களுக்கு பரவி இருக்கலாம் எனப்படுகிறது. [3] [4]
இதில் பின்வரும் கிளையினங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன: [1]
இதன் காய்கள் நீரில் மிதக்ககூடியதாக இருப்பதால், நீர் வழியாக எளிதில் பரவுகிறது. மேலும், இதன் காய்களில் உள்ள பற்று முட்கள் பாலூட்டிகளின் முடியில் சிக்கிக் கொண்டு அதன் மூலமும் வேறு இடங்களுக்கு பரவுவுகின்றன.
இந்த தாவரம் சில மருத்துவ குணங்களைக் கொண்டிருக்கலாம் [5] மேலும் இது தெற்காசியாவில் பாரம்பரிய மருத்துவத்திலும் பாரம்பரிய சீன மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது . தெலுங்கில் இந்த செடியை மருள மாதங்கி என்று அழைக்கின்றனர்.
இதில், முதிர்ந்த தாவரங்களின் பகுதிகளை குறைந்த அளவில் உட்கொள்ளலாம். இதன் விதைகளையும் நாற்றுகளையும் அதிக அளவில் உண்ணக்கூடாது. ஏனெனில் அவற்றில் மிகவும் நச்சுத்தன்மையுள்ள இரசாயனமான கார்பாக்சிட்ராக்டைலோசைட்டின் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன. முதிர்ந்த தாவரத்தில் குறைந்தத அளவு நச்சுகள் உள்ளன. [6]
சூனி மக்கள் பல நோக்கங்களுக்காக கனடென்ஸ் வகை தாவரத்தை பயன்படுத்துகின்றனர். கற்றாழை சடங்கிற்கு முன் மெல்லப்பட்ட இதன் விதைகளை உடலில் தேய்க்கின்றனர். இதன் விதைகளின் கலவை காயங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது அல்லது கட்டிகளுக்கு ஒத்தடம் கொடுக்கப் பயன்படுகிறது. [9] விதைகளும் அரைக்கப்பட்டு, சோள மாவுடன் கலந்து, வேகவைத்து ரொட்டி செய்யப்படுகிறது. [10] [11]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.