From Wikipedia, the free encyclopedia
மரபணுத்தொகையியல் (Genomics) என்பது மீளிணைதிற டி.என்.ஏ (recombinant DNA), டி.என்.ஏ வரிசைமுறைப்படுத்தல் (DNA sequencing) பற்றிய வழிமுறைகள் மற்றும் அதற்காக பயன்படுத்தபடும் கணினி வழி கருவிகள் குறித்த அறிவியல் துறையாகும்[1]. குறிப்பாக, இத்துறை டி.என்.ஏ தொகுப்பை கொண்டு மரபியலை ஆராயவும் உதவுகிறது. மேலும், இத்துறையின் மூலம் மரபணு இருக்கைகள் (loci) அல்லது எதிருருக்கள் (alleles) இடையே உள்ள தொடர்புகள் பற்றி அறியவும் உதவுகிறது. இத்துறையில் மரபணுக்களை (gene) தனித்து பார்க்காது, எப்போதும் பலவற்றை ஒன்று சேர்த்து, ஒருங்கியமாக ஆராய்வதால், இது மரபியல் (genetics) மற்றும் மூலக்கூற்று உயிரியல் (molecular biology) பாடங்களில் இருந்து வேறுபடுகிறது.[2]
1953 இல் ஜேம்ஸ் டூயி வாட்சன் (James Dewey Watson) மற்றும் பிரான்சிஸ் கிரிக்கின் (Francis Crick) டி.என்.ஏ கட்டமைப்பை கண்டறிந்ததை தொடர்ந்து, முதன் முதலாக,1955 இல், பிரடெரிக் சேனர் (Frederick Sanger), இன்சுலினின் அமினோ அமில வரிசைமுறையை வெளிக்கொணர்ந்தார்[3]. இதனை தொடர்ந்து, 1964 இல் ராபர்ட் வில்லியம் ஹோல்லே (Robert William Holley), அலனைன் (alanine) புரதப்பெயர்ப்பிலுள்ள ஆர்.என்.ஏயின் (transfer RNA), ரைபோ கருவமில வரிசைமுறையை கண்டறிந்தார் [4]. இதுவே, முதன் முதலாக கண்டறியப்பட்ட கருவமில வரிசைமுறையாகும். இதனை தொடர்ந்து, 1972 இல், முதல் மரபணுவின் வரிசைமுறையாக, Bacteriophage MS2 coat புரத மரபணுவின் வரிசைமுறையை வால்ட் பியேர்ஸ் (Walter Fiers) வரையறுத்தார் [5].
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.