From Wikipedia, the free encyclopedia
மதச்சார்பற்ற ஜனதா கட்சி (Janata Party (Secular) சூலை 1979-இல் ஜனதா கட்சியிலிருந்து வெளியேறிய ராஜ் நாராயணன் எனும் இந்திய அரசியல்வாதியால் துவக்கப்பட்டது. இந்திரா காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன், 16 சூலை 1979-இல் மதச்சார்பற்ற ஜனதா கட்சியின் அகில இந்தியத் தலைவரான சரண் சிங், இந்திய நடுவண் அரசின் பிரதம அமைச்சரானார். ஆனால் 20 ஆகஸ்டு 1979-இல் இந்திரா காங்கிரசு கட்சி தனது ஆதரவை சரண்சிங்கிற்கு விலக்கிக் கொண்டதால், சரண் சிங் பிரதமர் பதவியைத் துறந்தார்.
மதச்சார்பற்ற ஜனதா கட்சி | |
---|---|
நிறுவனர் | ராஜ் நாராயணன் |
தொடக்கம் | சூலை, 1979 |
பிரிவு | ஜனதா கட்சி |
இணைந்தது | ஜனதா தளம் |
பின்னர் | மதச்சார்பற்ற ஜனதா தளம் |
இந்தியா அரசியல் |
சரண் சிங், மதச்சார்பற்ற ஜனதா கட்சியின் பெயரை, லோக் தளம் என பெயரை மாற்றினாலும், ஏழாவது 1980 இந்தியப் பொதுத் தேர்தலில்.[1] மதச்சார்பற்ற ஜனதா கட்சியின் பெயரால் தன் கட்சியின் வேட்பாளர்களை நிறுத்தி, மொத்த வாக்குக்களில் 9.39% வாக்குகள் பெற்று, 41 மக்களவைத் தொகுதிகளைக் கைப்பற்றினார்.[2]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.