![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/58/Wikipe-tan_manga_page1.jpg/640px-Wikipe-tan_manga_page1.jpg&w=640&q=50)
மங்கா
From Wikipedia, the free encyclopedia
மங்கா (kanji: 漫画; ஒலிப்புⓘ; English: /ˈmɑːŋɡə/ அல்லது /ˈmæŋɡə/) வரைகதை (comics) என்பதன் யப்ப்பானிய சொல்[1]. இது குறிப்பாக ஜப்பானிய வரைகதை வடிவத்தை குறிக்க பயன்படுத்தப்படுகின்றது. மங்கா யப்பானிய உகியொ-இ பாணிக்கும் மேற்கத்தைய பாணிக்குமான ஒரு கலப்பு எனலாம். மங்காவின் புதிய பாணி இரண்டாம் உலகப்போரின் பின் என குறிப்பிடப்படுகின்றது.[2] ஆனால் அவற்றின் நீண்ட வரலாறு யப்ப்பானிய கலைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.[3] யப்ப்பானில், அனைத்து வயதிநரும் மங்காவைப் படிக்க விரும்புவர். பல வகையிலான படைப்புகளை இந்த ஊடகம் உள்ளடக்கும்: மற்றவைகளின் மத்தியில், அதிரடி சாகசங்கள்,வணிகம் மற்றும் வர்த்தகம், நகைச்சுவை, துப்பறிவு, வரலாற்று நாடகம், திகில், மர்மம், காதல், அறிவியல் புனைகதை, பாலியல், விளையாட்டு மற்றும் தீர்மானமின்மை.[4] [5] பல மங்காக்கள் மற்ற மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 1950களில் இருந்து, மங்கா யப்பணிய பதிப்பகத் துறையில் ஒரு முக்கிய பகுதியாக மாறிவிட்டது.
![யப்பானிய எழுத்துக்களில் மங்கா](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/75/Manga_in_Jp.svg/173px-Manga_in_Jp.svg.png)
![Example of a manga page](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/58/Wikipe-tan_manga_page1.jpg/320px-Wikipe-tan_manga_page1.jpg)
மங்கா கதைகள் பொதுவாக கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் அச்சிடப்படுகின்றன, இருப்பினும் சில வண்ணமயமான மங்கா உள்ளன. யப்ப்பானில், மங்கா பொதுவாக பெரிய மங்கா பத்திரிகைகளில் வரிசைப்படுத்தப்படுகின்றன, பெரும்பாலும் பல கதைகள் உள்ள. ஒவ்வொறு மங்காவிலும் ஒரு அத்தியாயம் இருக்கும், அது அடுத்த பதிப்பில் தொடரும்.
ஒரு மங்கா தொடர் போதுமான வரவேற்பை பெற்றால், அது வெளியீடின் போது, அல்லது பின்னர் அது அசைவூட்டப்படலாம். இதற்கு பெயர் அனிமே. சில நேரங்களில் மங்கா ஏற்கனவே இருக்கும் நேரடி அல்லது இயங்குப்பட திரைப்படங்களை மய்யமாக வைத்து வரையப்படுகின்றன.