மகாஸ்தங்கர்
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
மகாஸ்தங்கர் (Mahasthangarh) (வங்காள மொழி: মহাস্থানগড় கிமு 260-இல் அசோகர் நிறுவிய கல்வெட்டுக்கள் கொண்ட பௌத்த தொல்லியல் களம், வங்காளதேசம் நாட்டின் ராஜசாகி கோட்டம், போக்ரா மாவட்டத்தில் உள்ள மகாஸ்தங்கர் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது.[1][2][3] மகாஸ்தங்கர் கிராமத்தில் பேரரசர் அசோகர் பிராகிருத மொழியில் பிராமி எழுத்தில் 6 வரிகளில் பொறித்த சுண்ணாம்புக் கற்பலகை கல்வெட்டு உள்ளது. 1931-ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட் இக்கல்வெட்டில் அசோகர் நிலம் தானமாக கொடுத்தது பற்றி குறித்துள்ளது.[4][5]
மகாஸ்தங்கர் মহাস্থানগড় | |
---|---|
மகாஸ்தங்கர் அரண்மனைக் கோட்டை | |
இருப்பிடம் | மகாஸ்தங்கர், போக்ரா மாவட்டம், ராஜசாகி கோட்டம், வங்காளதேசம் |
ஆயத்தொலைகள் | 24°57′40″N 89°20′34″E |
வகை | குடியிருப்பு பகுதி |
வரலாறு | |
கட்டப்பட்டது | கிமு 3-ஆம் நூற்றாண்டு |
பயனற்றுப்போனது | கிபி எட்ட்டாம் நூற்றாண்டு |
மகாஸ்தங்கர் தொல்லியல் களம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் முதன்முதலில் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தொல்லியல் ஆய்வாளர் கே. என். தீட்சித் தலைமையில் 1928-29-ஆம் ஆண்டுகளில் அகழாய்வு செய்யப்பட்டது.
1931-இல் மகாஸ்தங்கர் தொல்லியல் கள அகழாய்வின் போது பேரரசர் அசோகர் (கிமு 260-இல்) பிராகிருத மொழியில் பிராமி எழுத்தில் 6 வரிகளில் பொறித்த 4.4 செமீ x 5.7 செமீ அளவு கொண்ட சுண்ணாம்புக் கற்பலகை கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. இக்கல்வெட்டில், மகாஸ்தங்கர் கிராம விளைநிலங்கள் தானமாக வழங்கப்பட்ட விவரம் உள்ளது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.