வடகிழக்கு நேபாளம் மற்றும் தென் மத்திய திபெத்தில் உள்ள இமயமலையின் பகுதி From Wikipedia, the free encyclopedia
மகாலங்கூர் இமால் (Mahālangūr Himāl) என்பது வடகிழக்கு நேபாளம் மற்றும் சீனாவின் தெற்கு மத்திய திபெத் ஆகிய பகுதிகளுக்கு இடையிலுள்ள இமய மலையின் ஒரு பிரிவாகும். நேங்பா கணவாய் மற்றும் ரோல்வாலிங் இமால் மற்றும் சோ ஓயு ஆகியவற்றுக்கு இடையில் கிழக்கு நோக்கி அருண் ஆறு வரைக்கும் நீண்டுள்ளது [1].
மகாலங்கூர் இமால் | |
---|---|
சோமோலொன்சோ முகடு, திபெத்து | |
உயர்ந்த புள்ளி | |
உச்சி | எவரெசுட்டு முகடு |
உயரம் | 8,848 m (29,029 அடி) |
பரிமாணங்கள் | |
நீளம் | 80 km (50 mi) ESE |
அகலம் | 65 km (40 mi) NNE |
பரப்பளவு | 5,200 km2 (2,000 sq mi) |
பெயரிடுதல் | |
தாயகப் பெயர் | மகாலங்கூர் இமால் [महालंगूर हिमाल] Error {{native name checker}}: parameter value is malformed (help) |
புவியியல் | |
நாடுகள் | நேப்பாளம் and திபெத்து |
மாவட்டங்கள் | சோலுகூம்பு மாவட்டம், சங்குவாசபா மாவட்டம் and திங்கிரி வட்டம் |
மூலத் தொடர் | இமயம் |
எல்லைகள் | உரொல்வாலிங் இமால் |
எண்ணாயிர மீட்டரை மீறும் மலைகள் நான்கு இத்துணைத் தொடரிலேயே உள்ளன. எவரெஸ்ட், லோட்சே, மக்காலு, சோ ஓயு ஆகிய மேற்படி மலைகளுடன், வேறும் பல முக்கிய மலைகள் இதில் உள்ளன. இதனால் இதை உலகின் மிக உயர்ந்த மலைத்தொடர் எனலாம். இதன் திபேத் பக்கத்தில், ரோங்புக் பனியாறும், காங்சங் பனியாறும் உள்ளன. நேபாளப் பக்கத்தில், கோசும்பா பனியாறு, கும்பு பனியாறு என்பவை இருக்கின்றன. எவரெஸ்ட் மலைமுகட்டில் ஏறுவதற்கான வழமையான பாதை கோசும்பாப் பகுதியில் அமைந்துள்ளதால் இப்பகுதியே இத் தொடரில் மிகவும் அதிகமாக அறியப்பட்ட பகுதியாகும்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.