![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/b9/Mahakali_districts.png/640px-Mahakali_districts.png&w=640&q=50)
மகாகாளி மண்டலம்
From Wikipedia, the free encyclopedia
மகாகாளி மண்டலம் (Mahakali zone) (நேபாளி: महाकाली अञ्चलகேட்கⓘ) தெற்காசியாவின் நேபாளத்தின் தூர மேற்கு வளர்ச்சி பிராந்தியத்தில் அமைந்த இரண்டு மண்டலங்களில் ஒன்றாகும். மற்றொன்று சேத்தி மண்டலம் ஆகும். 6,205 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மகாகாளி மண்டலத்தில் நான்கு மாவட்டங்கள் உள்ளது. இம்மண்டலத்தின் நிர்வாகத் தலைமையிடம் கஞ்சன்பூர் மாவட்டத்தில் அமைந்த பீம்தத்தா நகரம் ஆகும். இங்கு பாயும் மகாகாளி ஆற்றின் பெயரால், இம்மண்டலத்திற்கு மகாகாளி மண்டலம் எனப் பெயராயிற்று.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/b9/Mahakali_districts.png/640px-Mahakali_districts.png)