எழுத்தாளர் மற்றும் அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
மருதப்பன் நடராசன் (23 அக்டோபர் 1943 – 20 மார்ச்சு 2018)[1] என்பவர் புதிய பார்வை இதழின் ஆசிரியரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் மனைவி வி. கே. சசிகலா ஆவார். 1967ஆம் ஆண்டு மாணவப் பருவத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் பங்கேற்றார். பிறகு திமுகவில் இணைந்தார். தெற்கு ஆற்காடு மாவட்டத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றினார். ஜெயலலிதா-சசிகலா நட்பு உருவாக அடிப்படைக் காரணம் இவர்தான். அன்றைய கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரலேகாவின் உற்ற நண்பராக இருந்தார்.
இந்தக் கட்டுரை பல சிக்கல்களைக் கொண்டுள்ளது. எனவே தயவு செய்து இதை தொகுத்து மேம்படுத்தவும் அல்லது பேச்சு பக்கத்தில் இதனைக் குறித்து விவாதிக்கவும். | ||||||
---|---|---|---|---|---|---|
|
ம. நடராசன் | |
---|---|
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | மருதப்பன். நடராசன் 23 அக்டோபர் 1943 விளார், தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா |
இறப்பு | மார்ச்சு 20, 2018 74) சென்னை, தமிழ்நாடு, இந்தியா | (அகவை
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | திமுக (1965–1980) அதிமுக (1980–2018) |
துணைவர் | வி. கே. சசிகலா |
பெற்றோர் | தந்தை : மருதப்பன் மண்ணையார் தாயார் : மாரியம்மாள் |
வாழிடம்(s) | சென்னை, தமிழ்நாடு |
வேலை | அரசியல்வாதி, இதழாசிரியர் |
நடராசன் தஞ்சாவூரில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள விளார் என்ற ஊரில் மருதப்பன் மண்ணையார்-மாரியம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இவருக்கு ராமசந்திரன், பழநிவேல் என்ற இரண்டு இளைய சகோதரர்கள் உள்ளனர்.[2] தனது பள்ளிப் படிப்பை தஞ்சை தூய அந்தோணியார் பள்ளியிலும், இளங்கலைப் படிப்பை தஞ்சை மன்னர் சரபோசிக் கல்லூரியிலும், முதுகலைப் படிப்பை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும் முடித்தார்.
பின்பு புதிய பார்வை என்ற இதழைத் தொடங்கினார். ஈழத் தமிழர்களின் படுகொலைகளையும் பட்ட அவலங்களையும் நினைவுகூரும் வகையில் விளாரில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் என்னும் பெரிய கூடத்தை நிறுவினார். ஒவ்வொரு ஆண்டும் தஞ்சையில் கலை இலக்கிய விழாவை பொங்கல் விழாவின் போது நடத்தி வந்தார். ஈழப்போர் பற்றிய ஒரு நூலை எழுதினார்.
பல மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நடராஜன் 2018 மார்ச் 20 அன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலையில் சென்னை குளோபல் மருத்துவமனையில் உயிரிழந்தார்.[3][4]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.