போர்த்துக்கேய மொழி (Portuguese language) உலகில் அதிகம் பேசப்படும் மொழிகளில் ஆறாமிடம் வகிக்கிறது. இலத்தீனிலிருந்து உருவான மொழி. காலனித்துவ காலத்தில் உலகெங்கும் பரவியது. இம்மொழி இலத்தீன் எழுத்துக்களாலேயே எழுதப்படுகிறது. இது ஒரு மேற்கத்திய ரோமானிய மொழிக்குடும்பத்தைச் சார்ந்த மொழி ஆகும். போர்ச்சுக்கல், பிரேசில், கேப் வெர்டே, கினி-பிசாவு மொசாம்பிக், அங்கோலா, சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி ஆகிய நாடுகளின் ஒரே அதிகாரப்பூர்வ மொழியாகும்.[2] கிழக்குத் திமோர் எக்குவடோரியல் கினி, சீனாவில் மக்காவ் மாகாணம் போன்றவை இணை அதிகாரப்பூர்வ மொழியாகவும் உள்ளன. காலனித்துவ காலங்களில் விரிவாக்கத்தின் விளைவாக, போர்ச்சுகலின் ஒரு கலாச்சார இருப்பு மற்றும் போர்த்துக்கேய மொழி பேசுபவர்கள் இந்தியாவின் கோவா, டாமன் மற்றும் டையூ ஆகிய மாநிலங்களில் காணப்படுகின்றனர்.[3] இலங்கையின் கிழக்கு கரையோரத்தில் மட்டக்களப்பில்; இந்தோனேசிய தீவான புளோரஸ் மலேசியாவின் மலாக்கா பிராந்தியத்திம் மற்றும் பப்பியாமெந்தோ பேசப்படும் கரீபியன் பகுதியில் ஏபிசி தீவுகள் கேப் வேர்டீன் கிரியோல் என்பது பரவலாகப் பேசப்படும் போர்த்துகீசிய மொழி சார்ந்த ஐரோப்பிய மொழி ஆகும் ஆகும். போர்த்துக்கேய மொழி பேசும் நபர் அல்லது நாட்டை ஆங்கிலத்திலும் போர்த்துக்கேய மொழியிலும் "லூசோபோன்" ("Lusophone") என்று குறிப்பிடலாம்.

விரைவான உண்மைகள் போர்த்துக்கேயம், உச்சரிப்பு ...
போர்த்துக்கேயம்
Português
உச்சரிப்பு[puɾtu'geʃ] (ஐரோப்பா), [portu'ges], [portu'geis] or [pohtu'geiʃ] (பிரசில்)
நாடு(கள்) போர்த்துகல்
 பிரேசில்
 அங்கோலா
 மொசாம்பிக்
 கேப் வர்டி
 சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி
 கினி-பிசாவு
 கிழக்குத் திமோர்
 மக்காவு
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
தாய்மொழி: 240 மில்லியன் (பேசுவோர்)[1]  (date missing)
இந்தோ-ஐரோப்பிய
  • இத்தாலிய
    • ரோமானிய
      • மேற்கு இத்தாலிய
        • மேற்கு
          • காலோ-ஐபீரிய
            • ஐபீரிய-ரோமானிய
              • மேற்கு ஐபீரிய
                • கலீசிய-போர்த்துக்கீசம்
                  • போர்த்துக்கேயம்
இலத்தீன் எழுத்துமுறை (போர்த்துக்கேய வகை)
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
9 நாடுகள்
வார்ப்புரு:நாட்டுத் தகவல் ஆபிரிக்க ஒன்றியம்
 ஐரோப்பிய ஒன்றியம்
வார்ப்புரு:நாட்டுத் தகவல் தென்னமெரிக்க நாடுகளின் ஒன்றியம்
வார்ப்புரு:நாட்டுத் தகவல் மெர்க்கோசுர்
அமெரிக்க நாடுகளின் சங்கம்
போர்த்துக்கீச மொழிக் கொண்ட நாடுகளின் அமைப்பு
மொழி கட்டுப்பாடுபன்னாட்டு போர்த்துக்கீச மொழி நிறுவனம்; சி.பி.எல்.பி.; பிரசில் மொழி அக்காடமி (பிரசில்); லிஸ்பன் அறிவியல் அக்காடமி (போர்த்துகல்)
மொழிக் குறியீடுகள்
ISO 639-1pt
ISO 639-2por
ISO 639-3por
Thumb
மூடு
Thumb
போர்த்துகீசிய மொழி
போர்த்துகீசிய ஒலிப்பு

போர்த்துக்கேய மொழியானது இபேரோ-ரோமானிய மொழிக் குழுவின் ஒரு பகுதியாகும். கலிசியாவின் இடைக்கால இராச்சியத்தில் கொச்சை லத்தீனீன் பல மொழிகளில் இருந்து உருவானது. மேலும் சில செல்திக்கு ஒலியியல் மற்றும் சொற் களஞ்சியம் போன்றவற்றைக் கொண்டுள்ளன. [4][5] சுமார் 215 முதல் 220 மில்லியன் மக்கள் போர்த்துக்கேய மொழியைத் தாய்மொழியாகவும், உலகில் மொத்தம் 260 மில்லியன் மக்கள் இம்மொழியை பேசுபவர்களாகவும் உள்ளனர். போர்த்துகீசிய மொழி உலகில் ஆறாவது மிக அதிக அளவில் பேசப்படும் மொழியாக பட்டியலிடப்பட்டுள்ளது. உலகின் மூன்றாவது ஐரோப்பிய மொழியாகவும் அறியப்படுகிறது. மற்றும் தென் அரைக்கோளத்தின் ஒரு பெரிய மொழியாகவும். [6] தென் அமெரிக்காவில் அதிகம் பேசப்படும் மொழியாகும் விளங்குகிறது. மேலும் எசுப்பானிய மொழிக்குப் பிறகு இலத்தீன் அமெரிக்காவில் பேசப்படும் இரண்டாவது அதிகம் பேசும் மொழியாகும். ஐரோப்பிய யூனியன், தெற்கத்திய பொதுச் சந்தை, அமெரிக்க நாடுகள் அமைப்பு (OAS),மேற்காப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகம் (ECOWAS) மற்றும் ஆபிரிக்க ஒன்றியம் ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ மொழியாகும்.

வரலாறு

கி்.மு. 216 ல் ரோமானியர்கள் ஐபீரிய தீபகற்பத்தில் வந்தபோது அவர்கள் லத்தீன் மொழியையும் அவர்களோடு கொண்டு வந்தனர். அவர்கள் லத்தீன் மொழியையும் அவர்களிடம் கொண்டு வந்தனர். அதில் இருந்து அனைத்து ரோமானிய மொழிகளும் அங்கு வந்தன. ரோமானிய வீரர்கள், குடியேற்றக்காரர்கள் மற்றும் வணிகர்கள், தங்களின் வருகைக்கு முன்பே நீண்ட காலமாக நிறுவப்பட்ட முந்தைய செல்டிக் அல்லது செலிபீரிய நாகரிகங்களின் குடியிருப்புக்களுக்கு அருகில் அவர்களது குடியிருப்பு நகரங்கள் பெரும்பாலும் அமைந்தன.

கி.பி. 409 மற்றும் கி.பி. 711 க்கு இடையே மேற்கு ஐரோப்பாவில் ரோமானிய பேரரசு வீழ்ச்சியுற்றது போது ஐபீரிய தீபகற்பம் குடியேற்ற காலத்தின் செருமானிய மக்களால் கைப்பற்றப்பட்டது. ஆக்கிரமிப்பாளர்கள் பெரும்பாலும் செருமானிய பழங்குடிகளான சியூபி (Suebi) மற்றும் விசிகோத்துகள் (Visigoths) துவக்கத்தில் ஜெர்மானிய மொழிகளில் பேசினாலும் விரைவில் பிந்தைய ரோமானிய கலாச்சாரத்தையும் தீபகற்பத்தின் கொச்சை லத்தீன் மொழியியல் ஒலிகளையும் ஏற்றுக்கொண்டனர். [7][8] அடுத்த 300 ஆண்டுகளில் முற்றிலும் உள்ளூர் மக்களிடையே ஒருங்கிணைந்தனர். கி.பி 711 இல் மூரிசு படையெடுப்பு தொடங்கியதை அடுத்து வெற்றி பெற்ற பிராந்தியங்களில் அரபு மொழி நிர்வாக மற்றும் பொதுவான மொழியாக மாறியது. ஆனால் மீதமுள்ள பெரும்பாலான கிறித்தவர்கள் உரோமானிய மொழியான மோசரபு மொழியை தொடர்ந்து பேசினர். இது ஸ்பெயினில் மூன்று நூற்றாண்டுகள் நீடித்தது.

புவியியல் பரவல்

Thumb
சப்பானின் ஒயுசூமியில், ஜப்பானியம், போர்த்துக்கேயம் மற்றும் ஆங்கில மொழிகளில் வைக்கப்பட்ட பன்மொழி தகவல் பலகை. ஜப்பனீஸ் பிரேசிலியர்களின் குடியேற்றத்தால் போர்த்துக்கேய மொழி பேசும் ஒரு பெரிய சமூகம் இந்நகரத்தில் வசிககிறார்கள்.[9]

போர்த்துக்கேயம் பிரேசில் [10] மற்றும் போர்ச்சுக்கல் [11] நாட்டில் பெரும்பாலான மக்கள் பேசும் மொழியாகும். 1991 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி நாட்டில் 99.8% மக்கள் போர்த்துக்கேய மொழியைப் பேசுகின்றனர். ஒருவேளை அங்கோலாவில் 75% போர்த்துகீசியர்கள் போர்த்துக்கேய மொழி பேசுகிறார்கள். 85% மக்கள் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சரளமாக இம்மொழி பேசுபவர்களாக உள்ளனர். மொசாம்பிக்கின் மக்கள்தொகையில் 40% க்கும் அதிகமானோர் போர்த்துகீசிய மொழி பேசும் மொழி பேசுகின்றனர். [12] and 85% are more or less fluent.[13] அந்நாட்டில் 2007 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 60% பேர் சரளமாக அம்மொழி பேசுபவர்களாக உள்ளனர். [14] கினி-பிசாவு நாட்டில் 30% மக்களால் போர்த்துகீசியம் பேசப்படுகிறது மேலும் போர்த்துகீசிய அடிப்படையிலான மொழி அனைத்தும் புரிந்து கொள்ளப்படுகிறது. [15] கேப் வெர்டே நாட்டின் மொழியில் தரவு எதுவும் கிடைக்கவில்லை ஆனால் அங்கு கிட்டத்தட்ட அனைத்து மக்களும் இருமொழி பேசுபவர்களாகவும் ஒற்றை மொழி பேசும் ஏராளமான மக்கள் கேப் வேர்டீன் போர்த்துக்கேய அடிப்படை மொழியினை பேசுகின்றனர்.

பல நாடுகளில் கணிசமான போர்த்துக்கேய மொழி பேசும் குடியேற்ற சமூகங்களும் உள்ளன அன்டோரா, (15.4%) [16] பெர்முடா, [17] கனடா (2006 மக்கள் தொகை கணக்கெடுப்பில் 0.72% அல்லது 219,275 பேர்), [18] பிரான்ஸ் (500,000 பேர்), [19] ஜப்பான் (400,000 மக்கள்), [20] ஜெர்சி, [21] நமீபியா (சுமார் 4-5% மக்கள், முக்கியமாக நாட்டின் வடக்கு அங்கோலாவில் இருந்து அகதிகள்), [22] பராகுவே (10.7% அல்லது 636,000 மக்கள்), [23] மக்காவ் (0.6% அல்லது 12,000 பேர்), [24] சுவிட்சர்லாந்து (2008 இல் 196,000 தேசியவாதிகள்), [25] வெனிசுலா (254,000). [26] மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் (0.35% மக்கட்தொகை அல்லது 1,228,126 பேர் போர்த்துகீசியம் பேசுபவர்கள் - 2007 அமெரிக்கர்கள் சமுதாய கணக்கெடுப்பு படி). [27]

இந்தியாவின் முன்னாள் போர்த்துக்கேய ஆட்சிப்பகுதியான கோவா [28] மற்றும் டமன் மற்றும் டையூவில் [29] போர்த்துக்கேய மொழியை இன்னும் சுமார் 10,000 மக்களால் பேசப்படுகிறது. 2014 ஆம் ஆண்டில், கோவாவில் போர்த்துக்கேய மொழியை 1,500 மாணவர்கள் கற்றுக் கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. [30]

போர்த்துகேயம் அலுவல் மற்றும் இணை அலுவல் மொழியாக இருக்கும் நாடுகள் விபரம்

த வேர்ல்டு ஃபக்ட்புக்ன் படி 2016 ஆம் ஆண்டிற்கான ஒவ்வொரு நாட்டிலும் போர்த்துகேய மொழி பேசும் மக்கள்தொகை மதிப்பீடுகள், ( இறங்கு வரிசை அடிப்படையில்)

மேலதிகத் தகவல்கள் நாடு, மக்கட்தொகை (2017 est.) ...
மூடு

இதன் பொருள் லூசோபோனில் அதிகாரப்பூர்வ பகுதியில் வாழும் 272,918,286 மக்களில் போர்த்துகேய மொழியினை பேசுகின்றனர். இந்த எண்ணிக்கையில் லுசோபோன் புலம்பெயர்வு இல்லை, சுமார் 10 மில்லியன் மக்கள் (4.5 மில்லியன் போர்த்துகீசியர்கள், 3 மில்லியன் பிரேசிலியர்கள் மற்றும் அரை மில்லியன் கேப் வெர்டேன்கள் உட்பட) உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது, இருப்பினும் அதிகாரப்பூர்வ துல்லியமான போர்த்துகீசிய மொழி பேசுபவர்கள் இந்த குடிமக்களில் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியானது லுஸோபோன் பிரதேசத்திற்கு வெளியே பிறந்த அல்லது குடியேறியவர்களின் குழந்தைகளால் இயல்பான குடியுரிமை பெற்றவர்களாவர்.


மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.