From Wikipedia, the free encyclopedia
பொட்டாசியம் சிலிக்கேட்டு (Potassium silicate) என்பது K2SiO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தண்ணீரின் அளவுக்கு ஏற்ப இச்சிலிக்கேட்டின் மாதிரிகள் மாறுபடுகின்றன. பொதுவாக இவை வெண்மை நிறத்தில் திண்மங்களாகவோ அல்லது நிறமற்ற கரைசலாகவோ காணப்படுகின்றன[1].
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
பொட்டாசியம் மெட்டா சிலிக்கேட்டு | |
வேறு பெயர்கள்
திரவக் கண்ணாடி நீர்க்கண்ணாடி | |
இனங்காட்டிகள் | |
1312-76-1 | |
ChemSpider | 59585 |
EC number | 233-001-1 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 66200 |
| |
பண்புகள் | |
K2O3Si | |
வாய்ப்பாட்டு எடை | 154.28 g·mol−1 |
தோற்றம் | வெண்ணிற படிகங்கள் |
தீங்குகள் | |
ஈயூ வகைப்பாடு | Corrosive (C), Irritant (Xi) |
R-சொற்றொடர்கள் | R34, R37 |
S-சொற்றொடர்கள் | (S1/2), S13, S24/25, S36/37/39, S45 |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | பொட்டாசியம் கார்பனேட்டு பொட்டாசியம் செருமானேட்டு பொட்டாசியம் சிடானேட்டு பொட்டாசியம் பிளம்பேட்டு |
ஏனைய நேர் மின்அயனிகள் | சோடியம் சிலிக்கேட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
சிலிக்காவுடன் பொட்டாசியம் ஐதராக்சைடு சேர்த்து சூடுபடுத்துவதால் பொட்டாசியம் சிலிக்கேட்டு தொகுப்பு முறையில் தயாரிக்கப்படுகிறது.
nSio2 + 2KOH --> K2O + nSiO2 + H2O
இக்கரைசல்கள் அதிக காரத்தன்மையுடன் காணப்படுகின்றன. இவற்றுடன் அமிலங்களைச் சேர்த்தால் சிலிக்கா மீண்டும் உருவாகிறது.
ஒன்றுடன் ஒன்று உள்ளிணைப்புப் பெற்ற SiO3]]2- ஒருபடிகளால் ஆன சங்கிலி அல்லது வட்ட அமைப்பை பொட்டாசியம் சிலிக்கேட்டு பெற்றுள்ளது. ஒவ்வொரு Si அணுவும் நான்முக வடிவில் காணப்படுகின்றன.
பொட்டாசியம் சிலிக்கேட்டு கரைசலைக் கொண்டு மரப்பலகையை செறிவூட்டுவதன் மூலம் வீடுகளில் உள்ள மரவேலை பொருட்கள் எளிதில் தீப்பற்றுவதை தடுக்க முடியும். முதலில் மரச்சாமான்கள் பொட்டாசியம் சிலிக்கேட்டின், கிட்டத்தட்ட நடுநிலையான நீர்த்த கரைசலால் செறிவூட்டப்படுகின்றன. இக்கரைசல் உலர்ந்த பின்னார் ஒன்று அல்லது இரு முறை அடர் பொட்டாசியம் சிலிக்கேட்டு கரைசல் பூசப்படுகிறது[2]
பொட்டாசியம் மற்றும் சிலிக்கன் தனிமங்களின் கரையக்கூடிய மூலமாக தோட்டக்கலையில் பொட்டாசியம் சிலிக்கேட்டு பயன்படுத்தப்படுகிறது. வளர்ச்சி ஊடகத்தை இச்சிலிக்கேட்டு மேலும் காரத்தன்மை உடையதாக்குகிறது.
வழக்கமாக பயன்படுத்துடன் உரத்துடன் ஒரு இணைப்பாகவும் பொட்டாசியம் சிலிக்கேட்டு பயன்படுத்தப்படுகிறது. இதனால் சிலிக்கன் சேர்மங்களால் கிடைக்கும் எண்ணற்ற பயன்கள் விளைகின்றன. சிலிக்கன் சேர்மங்கள் தாவரங்களுக்கு இன்றியமையாதனவாகவும் ஆதரவாகவும் இருக்கின்றன. தண்டுகளை கெட்டியாக்குதல். வறட்சியைத் தாங்கும் இயல்பை செடிகளுக்கு அளித்தல், பயிர்கள் வாடுவதை தடுத்து நிறுத்தல், பெரிய இலைகளும் பழங்களும் வளர உதவுதல் முதலான பல பலன்கள் சிலிக்கன் சேர்மங்களால் தாவரங்களுக்குக் கிடைக்கின்றன.
உலோகங்களைத் தூய்மைப்படுத்தும் சில உருவாக்கங்களில் பொட்டாசியம் சிலிக்கேட்டு பயன்படுகிறது. தவிர அரிமாணத்தை தடுக்கும் வேதிப்பொருளாகவும் பயனாகிறது[3]. அழகு சாதனப் பொருட்கள் மற்றும் பற்ற வைக்கும் கம்பிகளை வனைதலிலும் இச்சிலிக்கேட்டு பயன்படுத்தப்படுகிறது.
பொட்டாசியம் சிலிக்கேட்டு ஒரு வலிமையான காரமாக இருப்பதால் எச்சரிக்கையுடன் கையாளவேண்டும்
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.