பொக்காரா
From Wikipedia, the free encyclopedia
பொக்காரா (Pokhara) (நேபாள்|पोखरा), காத்மாண்டுவிற்கு அடுத்து, நேபாள நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாகும். விலைவாசி அதிகமாக உள்ள நகரங்களில் பொக்காராவும் ஒன்று.[1] பொக்காரா, காஸ்கி மாவட்டத்தின் தலைமையிடமாக உள்ளது. தலைநகர் காத்மாண்டிலிருந்து மேற்கே 200 கிலோ மீட்டர் தொலைவில் பொக்காரா மாநகரம் அமைந்துள்ளது. பெரும்பாலான கூர்க்கா படை வீரர்களின் தாயகமாக பொக்காரா உள்ளது.
விரைவான உண்மைகள் பொக்காரா पोखरा, நாடு ...
பொக்காரா
पोखरा | |
---|---|
மலை வாழிடம் | |
அடைபெயர்(கள்): பொக்கு | |
நாடு | நேபாளம் |
பெரும் பிரிவு | மேற்கு |
மண்டலம் | கண்டகி |
மாவட்டம் | காஸ்கி மாவட்டம் |
எழுத்தறிவு விகிதம் | 83% High |
Incorporated | 1962 |
பரப்பளவு | |
• மொத்தம் | 55.22 km2 (21.32 sq mi) |
• நீர் | 4.4 km2 (1.7 sq mi) |
உயர் புள்ளி | 1,740 m (5,710 ft) |
தாழ் புள்ளி | 827 m (2,713 ft) |
மக்கள்தொகை (2011 (last census)) | |
• மொத்தம் | 2,55,465 |
• அடர்த்தி | 4,798.8/km2 (12,429/sq mi) |
• இனக் குழுக்கள் | காஸ் அந்தணர் செட்டிரி தாக்கூரி தலித் குரூங் மகர் நேவார் தக்களி |
• சமயங்கள் | இந்து பௌத்தம் கிறித்தவம் |
நேர வலயம் | GMT +5:45 |
தொலைபேசி குறியிடு எண் | 33700 (WRPD), 33702, 33704, 33706, 33708, 33713 |
இடக் குறியீடு | 061 |
இணையதளம் | pokhara |
மூடு
இமயமலைத் தொடரில் 827 முதல் 1740 அடி உயரத்தில் அமைந்துள்ளது.[2][3] பொக்காரா நகரத்திலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில், சுமார் 8000 மீட்டர்களுக்கு மேல் உயரம் கொண்ட அன்னபூர்ணா 1, தவுளகிரி மற்றும் மனசுலு என மூன்று கொடிமுடிகள் அமைந்துள்ளன.[4]
காத்மாண்டிலிருந்த்து முக்திநாத் யாத்திரை செல்பவர்கள் பொக்காரா வழியாகச் செல்ல வேண்டும்.