From Wikipedia, the free encyclopedia
பேரி எம். ஆஸ்போன் (Barrie M. Osborne, பிறப்பு: பிப்ரவரி 7, 1944) ஒரு அமெரிக்க திரைப்பட தயாரிப்பாளர், தயாரிப்பு நிர்வாகம் மற்றும் இயக்குநர்.
பேரி எம். ஆஸ்போன் | |
---|---|
பிறப்பு | பெப்ரவரி 7, 1944 நியூயார்க், அமெரிக்கா |
பணி | தயாரிப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1976-தற்போது வரை |
ஆஸ்போன், நியூயார்க் நகரத்தில் ஜெர்தா ச்க்வார்சு மற்றும் வில்லியம் ஆஸ்போன் அவர்களுக்கு மகனாக 1944-ம் ஆண்டு பிறந்தார்.[1] இவர் மினிசோட்டாவில் உள்ள கார்லெடான் கல்லூரியின் முன்னாள் மாணவர் ஆவார், தற்போது நியூசிலாந்தில் உள்ள வெல்லிங்க்டன் பகுதியில் வசித்து வருகிறார்.
ஆஸ்போனின் குறிப்பிடத்தக்க படமாக தி லார்ட் ஆப் தி ரிங்க்ஸ்: தி ரிட்டர்ன் ஆப் தி கிங் அமைந்தது, இத்திரைப்படத்திற்காக அவருக்கு அகாதமி விருது கிடைத்தது. இவ்விருதை பீட்டர் ஜேக்சன் மற்றும் ப்ரான் வால்ஷுடன் பகிர்ந்து கொண்டார்.
சமீபகாலத்தில், ஆஸ்போன் கத்தாரில் உள்ள அல்நூர் ஹோல்டிங்கஸ் என்ற நிறுவனம் முகம்மது நபியை பற்றிய 200 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள திரைப்படம் தயாரிக்க உதவியுள்ளார். பிப்ரவரி 2012-ல் தி கிரேட் கேட்ஸ்பை என்ற திரைப்படத்தின் மறு ஆக்கம் செய்துள்ளார்.[2]
கிரிஷ்டியன் கெல்லர்[3] இயக்கத்தில், க்லோரியா த்ரேவி[4] நடிக்கும் "த்ரேவி" திரைப்படத்தை மேக்ஸ் ஆப்பீடோல்,[5] உடன் இணைந்து தயாரிக்கிறார்.
ஆஸ்போன் தயாரிப்பில் தமிழ்த் திரைப்பட நடிகர் கமல்ஹாசன் கதை எழுதி நடிக்க இருப்பதாக செய்திகல் வெளியாகி உள்ளன.[6][7]
Seamless Wikipedia browsing. On steroids.