பேக்கலைட்டு
From Wikipedia, the free encyclopedia
பேக்கலைட்டு (Bakelite[3] அல்லது polyoxybenzylmethylenglycolanhydride) ஒரு வெப்பத்தால் இறுகும் நெகிழி ஆகும். இது ஃபீனால் ஃபாா்மால்டிகைடு வகைப் பிசினாாகும். பீனால் மற்றும் பார்மால்டிஹைடுகளின் குறுக்க வினையின் விளைவாக இத்தகைய இறுகும் நெகிழி உருவாக்கப்படுகிறது.
இனங்காட்டிகள் | |
---|---|
9003-35-4 | |
ChemSpider | none |
பண்புகள் | |
(C6H6O·CH2O)n | |
வாய்ப்பாட்டு எடை | மாறுபடக்கூடியது |
தோற்றம் | பழுப்புத் திண்மம் |
அடர்த்தி | 1.3 கி/செமீ3[1] |
வெப்பக் கடத்துத்திறன் | 0.2 W/(m·K)[1] |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.63[2] |
வெப்பவேதியியல் | |
வெப்பக் கொண்மை, C | 0.92 kJ/(kg·K)[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
முதன்முதலாக 1907 ஆம் ஆண்டு லியோ பேக்லேண்ட் என்ற பெல்ஜிய-அமொிக்க விஞ்ஞானியால் இது உருவாக்கப்பட்டது. பேக்கலைட் முதன்முதலாக செயற்கைப் பொருட்களிலிருந்து தொகுக்கப்பட்ட நெகிழி ஆகும். பேக்கலைட் நன்கு வெப்பம் தாங்கவல்லதும் மற்றும் மின்கடத்தாப்பொருளும் ஆகும். பேக்கைலட்டின் இத்தகைய பண்புகள் மின்சார சுவிட்சுகள், சமையல் சாதனங்கள், நகைப்பெட்டிகள் போன்றவை தயாாிப்பதற்குப் பேக்கலைட்டை அவசியமாக்கின. 1993 ஆம் ஆண்டு நவம்பா் 9 ஆம் தேதி, அமொிக்க வேதியியல் கழகத்தால் பேக்கைலட்டானது உலகின் முதல் தொகுப்பு முறை நெகிழி என்ற முக்கியத்துவத்திற்காகத் தேசிய வேதியியல் வரலாற்று சின்னமாக அங்கீகாிக்கப்பட்டது.