75 சதம மீட்டர் நீளமுள்ள, பறக்காத, பெரிய ஆக்கு அல்லது பெரிய ஓக் (Great Auk) பிங்குயினஸ் இம்பென்னிஸ் (அல்லது அல்கா இம்பென்னிஸ்), எல்லா ஆக்குகளிலும் பெரியதாகும். அற்றுப்போன இனமான இந்தப் பெரிய ஆக்குகள் வேல்சு மொழியில், அவற்றின் தலையிலுள்ள வெள்ளை நிறத்தை வைத்து, "வெண் தலை" எனப் பொருள்படும் பென்குயின் (penquin) என அழைக்கப்பட்டன.[4] எனவும் இதுவே பின்னர் "பென்குயின்" என்ற பறவையின் பெயருக்கு அடிப்படையாக அமைந்தது எனவும் நம்பப்படுகின்றது. தென்னரைக் கோளத்தில் பெரிய ஆக்கை ஒத்த (தற்போது பென்குயின் என அறியப்படும்) பறவைகளைக் கண்ட கடற்பயணிகள், இவ்விரு பறவைகளுக்கிடையிலும் காணப்படும் ஒற்றுமை காரணத்தால், தாம் புதிதாகக் கண்ட பறவைகளையும் அதே பெயரில் அழைத்தனர்..[4]

விரைவான உண்மைகள் காப்பு நிலை, உயிரியல் வகைப்பாடு ...
Great auk
புதைப்படிவ காலம்:5–0.0001 Ma
PreЄ
Pg
N
Early Pliocene – Late Holocene
Thumb
Specimen no. 8 and replica egg in Kelvingrove, கிளாஸ்கோ
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
ஆக் (பறவை)
பேரினம்:
Pinguinus

Bonnaterre, 1791
இனம்:
P. impennis
இருசொற் பெயரீடு
Pinguinus impennis
(கரோலஸ் லின்னேயஸ், 10th edition of Systema Naturae1758)
Thumb
Approximate range (in blue) with known breeding sites indicated by yellow marks[2][3]
வேறு பெயர்கள்
List
  • Alca impennis L. 1758
  • Plautus impennis (L. 1758) Brünnich, 1772
  • Pingouin impennis (L. 1758) Buffon, 1817
  • Alca borealis Forster, 1817
  • Chenalopex impennis (L. 1758) Vieillot, 1818
  • Alca major Boie, 1822
  • Mataeoptera impennis (L. 1758) Gloger, 1842
மூடு

பெரிய ஆக்குகள் ஒரு வருடத்தில் ஒரு முட்டையை மாத்திரமே இடுகின்றன. இவை நன்றாக நீந்தக் கூடியவை. தங்கள் சிறகுகளை உபயோகித்து நீருக்கடியில் நீந்த வல்லவை. பெரிய ஆக்குகள் ஒரு காலத்தில், கனடாவுக்கு அப்பாலுள்ள தீவுகளிலும், கிறீன்லாந்து, ஐஸ்லாந்து, நோர்வே, அயர்லாந்து மற்றும் பிரித்தானியா போன்ற இடங்களில் பெரும் எண்ணிக்கையில் காணப்பட்டன.

ஏனைய ஆக்குகளைப் போல, பெரிய ஆக்குகளால் பறக்க முடியாது. இதனால் தான் இப் பறவைகள் மனிதருக்கு இலக்காகக்கூடியனவாக இருந்தன. கி.பி. 8 ஆம் நூற்றாண்டிலிருந்து இப் பறவைகள், உணவுக்காகவும், மெத்தைகள் செய்வதற்காகவும் வேட்டையாடப்பட்டன. காலப்போக்கில் இப் பறவைகள் அழிந்து போகும் வரை வேட்டையாடப்பட்டன. இவ்வினத்தின் கடைசி இணைகள், 1844, ஜூலை 3ல் ஐஸ்லாந்துக்கு அப்பாலுள்ள ஒரு தீவில் வைத்துக் கொல்லப்பட்டன.

மேற்கோள்கள்

பின் வருவனவற்றையும் பார்க்கவும்

வெளியிணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.