பகாங் மாநிலத்தில், பெந்தோங் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். பகாங் மாநிலத்தில் இரண்டாவது பெரிய நக From Wikipedia, the free encyclopedia
பெந்தோங் என்பது (மலாய்: Bentong; ஆங்கிலம்: Bentong; சீனம்: 文冬) மலேசியா, பகாங் மாநிலத்தில், பெந்தோங் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். பகாங் மாநிலத்தில் இரண்டாவது பெரிய நகரம். கோலாலம்பூர் மாநகருக்கு வடகிழக்கில் 80 கி.மீ தொலைவில், தித்திவாங்சா மலைத்தொடருக்கு எதிரே அமைந்து உள்ளது.
பெந்தோங் Bentong | |
---|---|
ஆள்கூறுகள்: 3°31′N 101°55′E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | பகாங் |
நகரத் தோற்றம் | 16 சூலை 2005[1] |
மாநகர்த் தகுதி | 1 அக்டோபர் 2021 |
அரசு | |
• யாங் டி பெர்துவா Yang Dipertua | துவான் டத்தோ ஹாஜா அயிடா முனிரா Dato' Hajah Aida Munira Binti Abdul Rafar |
பரப்பளவு | |
• மொத்தம் | 867.69 km2 (335.02 sq mi) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 1,14,397 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 28xxx |
தொலைபேசி | +6-09 (தரைவழித் தொடர்பு) |
வாகனப் பதிவெண்கள் | C |
இணையதளம் | www |
இந்த நகரத்தின் மேற்கில் சிலாங்கூர் மாநிலம்; தெற்கில் நெகிரி செம்பிலான் மாநிலம்; எல்லைகளாக அமைந்து உள்ளன. கிழக்கு கடற்கரை கிளாந்தான்; திரங்கானு மாநிலங்களுக்குச் சாலை வழியாகச் செல்வதற்கு இந்த நகரம் நுழைவாயிலாக அமைகின்றது.
உள்ளூர் ரப்பர் தோட்டங்கள் மற்றும் ஈயச் சுரங்கங்களுக்கான வணிக மையமாகவும் கெந்திங் மலைக்குச் செல்லும் அடிவாசல் நகரமாகவும் விளங்குகிறது.[2]
பெந்தோங் நகரத்திற்குச் செல்லும் அசல் பிரதான சாலை, இப்போது இரட்டை வழிச் சாலையாக மாற்றப்பட்டு உள்ளது. நாட்டின் முதல் "புதுக் காற்று வழி நுரையீரல் தூய்மை செய்" இடமாக (Fresh Air Lung Washing Eco Tourism Destination) அறிவிக்கப்பட்டு உள்ளது.[3]
ஒரு பழைய புராணக் கதையின்படி, முன்னர் காலத்தில் கார்லோ சாஸ் (Carlo Sas) என்று அழைக்கப்பட்டது. முதலாம் உலகப் போருக்கு முன்னர் பெந்தோங் எனும் பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டது.
முந்தைய காலங்களில், பெந்தோங் நகரம் இப்போதைய சந்தைப் பகுதிக்கு அருகில் இருந்தது. அந்தப் பகுதி ரெபாஸ் நதியும் பெர்த்திங் நதியும் சந்திக்கும் இடத்தில் இருக்கும் சோங்கி எனும் கிராமப் பகுதி என்றும் சொல்லப் படுகிறது.
1995-ஆம் ஆண்டில், அரசாங்கத்தின் அரசிதழ் 47/ 5/5/1995 மூலமாகப் பெந்தோங் நகரம ஒரு நகராட்சி மன்றமாக மாற்றம் செய்யப்பட்டது.
பெந்தோங் நகரில் ஒரு தமிழ்ப்பள்ளி உள்ளது. அதன் பெயர் பெந்தோங் தமிழ்ப்பள்ளி (SJKT Bentong). 145 மாணவர்கள் பயில்கிறார்கள். 15 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.[4]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.