![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/61/FunanMap001.jpg/640px-FunanMap001.jpg&w=640&q=50)
பூனான்
From Wikipedia, the free encyclopedia
பூனான் அல்லது நோக்கோர் பொனாம் (மலை கூட்டரசு) (ஆங்கிலம்: Funan; கெமர் மொழி: ហ្វូណន; அல்லது கெமர்: នគរភ្នំ; சீனம்: 夫南); என்பது கி.பி. முதலாம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றாண்டு வரை தென்கிழக்காசியா மீகோங் சமவெளியை (Mekong Delta) மையமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த ஒரு பண்டைய இராச்சியம் ஆகும்.[1]
விரைவான உண்மைகள் பூனான்Funanនគរភ្នំ, நிலை ...
பூனான் Funan នគរភ្នំ | |||||||
---|---|---|---|---|---|---|---|
68 CE–550 CE | |||||||
![]() | |||||||
நிலை | பேரரசு | ||||||
தலைநகரம் | வியாதபுரம் (Vyadhapura) | ||||||
பேசப்படும் மொழிகள் | கெமர் மொழி, சமசுகிருதம் | ||||||
சமயம் | இந்து, பௌத்தம், அனிமிசம் | ||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||
வரலாறு | |||||||
• தொடக்கம் | 68 CE | ||||||
• முடிவு | 550 CE | ||||||
| |||||||
தற்போதைய பகுதிகள் |
மூடு
பண்டைய இந்துக் கலாசாரத்தைக் கடைபிடித்து வந்த இந்த நிலப் பகுதிக்கு அல்லது மண்டலத்திற்கு (Mandala); பூனான் எனும் பெயர், சீன வரைபடவியலாளர்கள், புவியியலாளர்கள், எழுத்தாளர்கள் வழங்கிய பெயராகும் (Greater Indianized Kingdoms of South East Asia). பூனான் இராச்சியம் முதலாம் நூற்றான்டு முதல் ஆறாம் நூற்றாண்டு வரையில் இருந்ததைப் பற்றி விவரிக்கும் சீன வரலாற்று நூல்களில் குறிப்புகள் காணப்படுகின்றன.[2][3]