From Wikipedia, the free encyclopedia
புளோரன்சு (Florence) [2] என்பது இத்தாலியில் அமைந்துள்ள துஸ்கனி பிராந்தியத்தினதும் புளோரன்சு மாகாணத்தினதும் தலைநகரம் ஆகும். துஸ்கனி பிராந்தியத்திலே மிகவும் பிரபல்யமான நகரம் இதுவாகும். அண்ணளவாக 382,000 மக்கள் இங்கு வசிந்து வருகின்றனர். வரலாற்று ரீதியாக இந்நகரம் அனைவராலும் அறியப்பட்டதாகும். மத்திய கால ஐரோப்பாவினது வணிக, வர்த்தக மத்திய நிலையமாக இது விளங்கியதோடு செல்வந்த நகரங்களில் ஒன்றாகவும் காணப்பட்டது.[3] அத்துடன் மறுமலர்ச்சியின் பிறப்பிடமாகவும் இந்நகரமே கருதப்படுகின்றது. அத்துடன் "மத்திய காலத்தின் ஏதென்ஸ்" எனவும் இது அழைக்கப்படுகின்றது.[4] இது பல ஆண்டுகளாக மெடிசி பரம்பரையினரால் ஆளப்பட்டு வந்தது.[5] அத்துடன் 1865 ஆம் ஆண்டில் இருந்து 1871 ஆம் ஆண்டு வரை இத்தாலி இராச்சியத்தின் தலைநகரமாக விளங்கியது. புளோரன்சு வர்த்தக நிலையத்தினை பர்வையிடுவதற்கா ஆண்டு தோறும் பல மில்லியன் கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருவதுண்டு. யூரோமொனிட்டர் இன்டெர்னசனல்ஸ் இனால் 2012 ஆம் ஆண்டில் பல மக்களால் தரிசிக்கப்பட்ட இடங்களுள் 89 ஆவதாக இந்நகரம் பட்டியலிடப்பட்டது.[6] 1982 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவினால் உலக பாரம்பரியக் களமாக இது பிரகடனப்படுத்தப்பட்டது.
புளோரன்சு
பிரென்சே | |
---|---|
கொம்யூன் | |
Comune di Firenze | |
நாடு | இத்தாலி |
மண்டலம் | டசுக்கனி |
மாகாணம் | புளோரன்சு மாகாணம் (FI) |
அரசு | |
• நகரத் தந்தை | டார்டியோ நார்டெல்லா ([[List of political parties in Italy|PD]]) |
பரப்பளவு | |
• மொத்தம் | 102.41 km2 (39.54 sq mi) |
ஏற்றம் | 50 m (160 ft) |
மக்கள்தொகை (31 December 2014)[1] | |
• மொத்தம் | 3,81,037 |
இனங்கள் | Florentine, fiorentino |
நேர வலயம் | ஒசநே+1 (CET) |
• கோடை (பசேநே) | ஒசநே+2 (CEST) |
அஞ்சல் குறியீடு | 50121–50145 |
Dialing code | 055 |
பாதுகாவல் புனிதர் | திருமுழுக்கு யோவான் |
புனிதர் நாள் | 24 June |
இணையதளம் | அதிகாரப்பூர்வ இணையதளம் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.