புரோமின் முப்புளோரைடு
From Wikipedia, the free encyclopedia
புரோமின் முப்புளோரைடு (Bromine trifluoride) என்பது BrF3 என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட ஒரு உப்பீனியிடைச் சேர்மமாகும். வைக்கோல் நிறம் கொண்ட இத்திரவம் காரநெடியுடையது ஆகும்.[4] இது கந்தக அமிலத்தில் கரையும் அதே நேரத்தில் தண்ணீருடனும் கரிமச் சேர்மங்களுடனும் தொடர்பு கொண்டால் வெடிக்கும் தன்மை கொண்டுள்ளது. இது ஒரு சக்திவாய்ந்த புளோரினேற்றும் முகவராகவும் அயனியாக்கும் கனிம கரைப்பானாகவும் இருக்கிறது. யுரேனியம் அறுமபுளோரைடு ((UF6)) உற்பத்தி செய்வதில் அணு எரிபொருளை பதப்படுத்தல் , மறு பதப்படுத்தல் ஆகிய செயல்முறைகளில் பயன்படுத்தப்படுகிறது.[5]
விரைவான உண்மைகள் பண்புகள், கட்டமைப்பு ...
![]() | |
![]() | |
பண்புகள் | |
---|---|
BrF3 | |
வாய்ப்பாட்டு எடை | 136.90 கி/மோல் |
தோற்றம் | வைக்கோல் நிற திரவம் நீருறிஞ்சி |
மணம் | கார நெடியுடையது[1] |
அடர்த்தி | 2.803 கி/செ.மீ3 [2] |
உருகுநிலை | 8.77 °C (47.79 °F; 281.92 K) |
கொதிநிலை | 125.72 °C (258.30 °F; 398.87 K) |
வேகமாக சிதைவடைகிறது [3] | |
கந்தக அமிலம்-இல் கரைதிறன் | நன்றாக கரையும் |
கட்டமைப்பு | |
மூலக்கூறு வடிவம் | |
இருமுனைத் திருப்புமை (Dipole moment) | 1.19 D |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | நீருடன் தொடர்பு அபாயகரமானது.HF உற்பத்திக்கான மூலப்பொருள் |
ஈயூ வகைப்பாடு | ![]() ![]() ![]() |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | புரோமின் ஒற்றை குளோரைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | குளோரின் முப்புளோரைடு அயோடின் முப்புளோரைடு |
தொடர்புடைய சேர்மங்கள் | புரோமின் ஒற்றை புளோரைடு புரோமின் ஐம்புளோரைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மூடு