புபேந்திர படேல்
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
புபேந்திர ரஜின்காந்த் படேல் (Bhupendra Rajnikant Patel) (பிறப்பு: 15 சூலை 1962) குஜராத் மாநில பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதியும், குசராத்து சட்டமன்ற உறுப்பினரும்[2][3], குசராத்து மாநிலத்தின் 17ஆவது முதலமைச்சரும் ஆவார்.[4][5]
புபேந்திரபாய் படேல் | |
---|---|
17வது குஜராத் முதலமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 13 செப்டம்பர் 2021 | |
ஆளுநர் | ஆச்சாரியா தேவவிரதன் |
முன்னையவர் | விஜய் ருபானி |
குசராத்து சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2017 | |
முன்னையவர் | ஆனந்திபென் படேல் |
தொகுதி | காடோலோதியா சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 15 சூலை 1962 காந்திநகர், குஜராத், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | தேசிய ஜனநாயகக் கூட்டணி |
துணைவர் | ஹேத்தல் படேல் |
வாழிடம்(s) | சிலாஜ், அகமதாபாத், குஜராத் |
வேலை | அரசியல்வாதி, கட்டுமானப் பொறியாளர் |
புனைப்பெயர் | தாதா[1] |
11 செப்டம்பர் 2021 அன்று குசராத்து முதலமைச்சர் விஜய் ருபானி பதவி விலகியதை அடுத்து, 12 செப்டம்பர் 2021 அன்று பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களால் புபேந்திர படேல் முதன்முறையாக முதலமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டார்.[6] 13 செப்டம்பர் 2021 அன்று இவர் முதலமைச்சராக பதவி ஏற்றார்.[6]
2022 குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 182 தொகுதிகளில் 156 தொகுதிகளை கைப்பற்றியது. இதனால் புபேந்திர படேல் இரண்டாவது முறையாக 12 திசம்பர் 2022 அன்று முதலமைச்சராக, ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத்தால் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டார்.[7][8][9]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.