From Wikipedia, the free encyclopedia
புனாகா சோங் (Punakha Dzong), அல்லது புங்டங் டேசென் ஃபோட்ரங் சோங் (Pungtang Dechen Photrang Dzong) (பொருள்: “பெரும் மகிழ்ச்சி அல்லது இன்பம் நிறைந்த அரண்மனை”[1][2]) பூட்டானின் புனாகாவில் அமைந்துள்ள புனாகா மாவட்ட நிர்வாக மையமாகும். 1637-38ஆம் ஆண்டுகளில் சப்ரதுங் கவங் நம்கியாலால் கட்டப்பட்ட[1][3] இந்தக் கோட்டை மிக அழகானதும் பூட்டானின் இரண்டாவது மிகப்பழமையானதும் மிகப்பெரியதுமானதாகும். [1][4] இந்தக் கோட்டையில் தென் ட்ருக்பா கக்யூ பள்ளியின் புனித எச்சங்களும் ரங்ஜுங் கசர்பானி , சப்ரதுங் கவங் நம்கியால் மற்றும் பேமா லிங்பாவின் புனித எச்சங்களும் அடங்கியுள்ளன. 1955ஆம் ஆண்டில் தலைநகர் திம்புவிற்கு மாறும்வரை புனாகா சோங் நிர்வாக மையமாகவும் பூட்டான் அரசின் இருப்பிடமாகவும் விளங்கியது. [2][4][5]
புனாகா சோங் புங்டங் டேசென் ஃபோட்ரங் சோங் | |
---|---|
புனாகா சோங் | |
புனாகாவில் ஜாகரன்டா மரங்கள் சூழ உள்ள புங்டங் டேசென் ஃபோட்ரங் சோங் | |
மாற்றுப் பெயர்கள் | புங்டங் டேசென் ஃபோட்ரங் சோங் |
பொதுவான தகவல்கள் | |
வகை | சமய மற்றும் குடிசார் நிர்வாகம் |
கட்டிடக்கலை பாணி | சோங் |
இடம் | புனாகா, பூட்டான் |
உயரம் | 1,200 |
கட்டுமான ஆரம்பம் | 1637 |
நிறைவுற்றது | 1638 |
புதுப்பித்தல் | 2004 |
உரிமையாளர் | பூட்டான் அரசு |
தொழில்நுட்ப விபரங்கள் | |
அமைப்பு முறை | கோட்டை |
தள எண்ணிக்கை | ஆறு |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக்கலைஞர்(கள்) | சோவே பாலெப் மற்றும் சப்ரதுங் கவங் நம்கியால் |
அக்டோபர் 13, 2011 அன்று பூட்டான் அரசர் ஜிக்மே கேசர் நாம்கியல் வாங்சுக் மற்றும் ஜெட்சுன் பெமாவின் திருமணம் இந்தக் கோட்டையில் நடந்தது. [6]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.