புதிய பொதுப் பட்டியல்
From Wikipedia, the free encyclopedia
நெபுலா மற்றும் விண்மீன் கொத்துகளின் புதிய பொதுப் பட்டியல் (New General Catalogue of Nebulae and Clusters of Stars, சுருக்கமாக NGC) என்பது உள் வானிலுள்ள நெபுலா மற்றும் விண்மீன் கொத்துகள் போன்று நன்கு அறியப்பட்ட வான்பொருட்களின் பட்டியலாகும். 1888 ஆம் ஆண்டில் ஜான் லூயிஸ் எமில் டிரேயர் தொகுத்த இப்பட்டியல் தற்போது, ஜான் ஹெர்ச்செல் அவர்களின் நெபுலா மற்றும் விண்மீன் கொத்துகளின் புதிய பதிப்பு பெயர்ப்பட்டியலாக விளங்குகிறது. இப்புதிய பட்டியலில் உள்ள 7840 பொருட்களும் புதிய வானுறுப்புகள் எனப்படுகின்றன. விரிவான பெயர்ப் பட்டியல்களுள் ஒன்றான இது அனைத்து வகையான உள்வான் பொருட்களையும் உள்ளடக்கியுள்ளது. நெபுலா மற்றும் விண்மீன் கொத்துகள் என்பது மட்டுமல்ல விண்மீன் திரள்களும் இதற்குள் உள்ளடங்கும். புதிய பொது பெயர்ப்பட்டியலுடன் கூடுதலாக இரண்டு அட்டவணைப் பட்டியல்களை (சுருக்கமாக அ.ப) துணைப்பட்டியல்களாக டிரேயர் வெளியிட்டார். 1520 உறுப்புகளுடன் முதலாவது துணைப்பட்டியல் 1895 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இரண்டாவது பட்டியல் 3866 உறுப்புகளுடன் 1908 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. ஆக அட்டவணைப் பட்டியலில் மொத்தமாக 5386 உறுப்புகள் இடம் பெற்றிருந்தன.
புதிய பொதுப் பட்டியல் New General Catalogue (NGC) | |
---|---|
Spiral Galaxy NGC 3982 displays numerous spiral arms filled with bright stars, blue star clusters, and dark dust lanes. It spans about 30,000 light years, lies about 68 million light years from Earth and can be seen with a small telescope in the constellation of Ursa Major. | |
நிறுவனம் | ஜே. எ. ஈ. டிரெயர் துன்சிங்க் வானாய்வகம், டப்ளின் பல்கலைக்கழகம் |
தரவு மூலம் | வில்லியம் ஹேர்ச்செல் ஜான் ஹெர்ச்செல் மற்றும் பலர் (சுலென்டிக், டிஃப்ட் ஆகியோரால் புதிப்பிக்கப்பட்டது) |
இலக்குகள் | விண்மீன்சாராப் பொருட்கள் பற்றிய மதிப்பீடு |
Data products | என்ஜிசி பட்டியல் |
இணையத்தளம் புதுப்பிக்கப்பட்ட புதிய பொதுப் பட்டியல் |
வானத்தின் தென் துருவத்தில் உள்ள புதிய பொருட்கள் எண்ணிக்கையில் முற்றிலும் சற்று குறைவாகவே வகைபடுத்தப்பட்டுள்ளன. ஆனால், ஜான் ஹெர்ச்செல் அல்லது ஜேம்ஸ் டன்லப் ஆகியோர் பல பொருட்களை அவதானித்தனர். மேலும் புதிய பொதுப்பட்டியலில் பல பிழைகள் காணப்பட்டன. அப்பிழைகளைக் களையும் முயற்சியாக 1973 ஆம் ஆண்டில் சுலெண்டிக்கு மற்றும் டிப்ட், புதிய பொதுப் பட்டியல் 2000.0 திட்டமாக 1888 ல் சின்னோட் என்பவர்களால மேற்கொள்ளப்பட்ட முயற்சி பகுதிமுயற்சியாக இருந்தது.