![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/88/Starr_010831-0016_Morella_faya.jpg/640px-Starr_010831-0016_Morella_faya.jpg&w=640&q=50)
புதர்க்காடு
From Wikipedia, the free encyclopedia
புதர்க்காடுகள், புதர்வெளிகள், பற்றைகள் (English: Shrubland) என்பவை புதர்ச் செடிகள் நிறைந்த காட்டுப் பகுதிகளைக் குறிக்கும். இக் காடுகளில் புற்கள், செடிகள், வேர்த் தண்டுச் செடிகள் நிறைந்தும் காணப்படும். இவ் வகைக் காடுகள் இயற்கையாக தோன்றக் கூடியவை. சில சமயம் மனித நடமாட்டங்களின் விளைவுகளாலும் இவ் வகைக் காடுகள் உருவாகக் கூடும். தொடர்ச்சியாக புதர்கள் மண்டிக் கிடக்கும் காட்டுப் பகுதிகளாக இவை காணப்படுவது உண்டு[1]. சில சமயங்கள் காட்டுத் தீ போன்றவைகளால் பெருங்காடுகள் அழிந்து புதர்க்காடுகளாக உருமாறிவிடுவதும் உண்டு. புதர்க்காட்டுப் பகுதிகளில் மனிதக் குடியிருப்புக்களை உருவாக்குவது ஆபத்தானது. ஏனெனில் காட்டுத் தீ பரவும் அபாயம் அங்கு எப்போதும் உண்டு. [2]
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/88/Starr_010831-0016_Morella_faya.jpg/640px-Starr_010831-0016_Morella_faya.jpg)