பீக்கிங் பல்கலைக்கழகம்
From Wikipedia, the free encyclopedia
பீக்கிங் பல்கலைக்கழகம் (Peking University), சீனாவின் பெய்ஜிங் நகரில் உள்ள பல்கலைக்கழகம். சீனாவின் முதல் தேசியப் பல்கலைக்கழகமாக நிறுவப்பட்டது. 1898 ஆம் ஆண்டில், பீக்கிங்கின் இம்பீரியல் பல்கலைக்கழகம் என்ற பெயரில் தொடங்கப்பட்டது.[3] இன்றளவில், சீனாவின் முக்கியமான பல்கலைக்கழகங்களில் இதுவும் ஒன்றாக விளங்குகிறது.[4][5][6]
விரைவான உண்மைகள் முந்தைய பெயர்கள், வகை ...
北京大学 | |
முந்தைய பெயர்கள் | பீக்கிங்கின் இம்பீரியல் பல்கலைக்கழகம் [1] |
---|---|
வகை | அரசுப் பல்கலைக்கழகம் |
உருவாக்கம் | 1898 |
தலைவர் | வங் எங்கே |
கல்வி பணியாளர் | 4,206[2] |
பட்ட மாணவர்கள் | 15,128[2] |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 15,119[2] |
அமைவிடம் | ஹைடியன் மாவட்டம், பெய்ஜிங் , |
வளாகம் | நகர்ப்புறம், 273 ha (670 ஏக்கர்கள்) |
சேர்ப்பு | பன்னாட்டு ஆய்வுப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு, கிழக்கு ஆசியப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு, பசிபிக் ரிம் பல்கலைக்கழகங்களின் சங்கம், பெசெதோகா பல்கலைக்கழகங்கள், சி9 லீக் |
இணையதளம் | www |
மூடு
சீனாவின் முக்கிய நபர்கள் பலர் இங்கு படித்தவர்களே. இவர்களில் லூ சுன், மா சே துங், கு ஹோங்மிங், ஹு சிஹ், லி டசாவோ, சென் டுக்சியு.[7]. சீனாவின் புதுப் பண்பாட்டு இயக்கம், மே நான்கு இயக்கம், 1989 தியனன்மென் சதுக்கம் எதிர்ப்புப் போராட்டங்கள் ஆகியவற்றில் இந்த பல்கலைக்கழகத்தின் பங்கு குறிப்பிடத்தக்கது.[8]