From Wikipedia, the free encyclopedia
பிலிப்பீன்சுப் பொதுநலவாயம் (Commonwealth of the Philippines)[1] என்பது 1935 முதல் 1946 வரை பிலிப்பீன்சு நாட்டை ஆட்சி செய்த ஒரு அரசு ஆகும். 1942 முதல் 1945 வரை இரண்டாம் உலகப் போரின் போது சப்பானியரின் ஆதிக்கத்தில் இவ்வரசு நாடு-கடந்த நிலையில் இயங்கியது. ஐக்கிய அமெரிக்காவின் ஆட்சிக்குட்பட்ட அரசுக்குப் பதிலாக பொதுநலவாயம் உருவாக்கப்பட்டது. பிலிப்பீன்சு முழுமையான விடுதலையை அடைவதற்குத் தயாராகும் பொருட்டு பொதுநலவாயம் வடிவமைக்கப்பட்டது.[9]
பிலிப்பீன்சு பொதுநலவாயம் Commonwealth of the Philippines Komonwelt ng Pilipinas (பிலிப்பீனோ)[1] | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1935–1946 | |||||||||||||
நாட்டுப்பண்: லூப்பாங் இனிராங் (நாட்டுப்பண், 1938 செப்டம்பர் 5 முதல்) | |||||||||||||
நிலை | ஐக்கிய அமெரிக்காவின் காப்பரசு | ||||||||||||
தலைநகரம் | மணிலாa | ||||||||||||
பேசப்படும் மொழிகள் | |||||||||||||
அரசாங்கம் | பல-கட்சிக் குடியரசு | ||||||||||||
அரசுத்தலைவர் | |||||||||||||
• 1935–44 | மனுவேல் எல். குவிசோன் | ||||||||||||
• 1944–46 | சேர்ஜியோ ஒசுமேனா | ||||||||||||
• 1946 | மனுவேல் ஏ. ரொக்சாசு | ||||||||||||
பிரதித் தலைவர் | |||||||||||||
• 1935–44 | சேர்ஜியோ ஒசுமேனா | ||||||||||||
• 1946 | எல்பீடியோ கிரீனோ | ||||||||||||
சட்டமன்றம் |
| ||||||||||||
வரலாற்று சகாப்தம் | உள்போர், இரண்டாம் உலகப் போர் | ||||||||||||
• டைடிங்சு-மெக்டஃபி சட்டம் | 15 நவம்பர்[5][6][7][8] 1935 | ||||||||||||
• விடுதலை | 4 சூலை 1946 | ||||||||||||
• மணிலா ஒப்பந்தம் | 22 அக்டோபர் 1946 | ||||||||||||
பரப்பு | |||||||||||||
1939 | 300,000 km2 (120,000 sq mi) | ||||||||||||
மக்கள் தொகை | |||||||||||||
• 1939 | 16000303 | ||||||||||||
நாணயம் | பெசோ | ||||||||||||
| |||||||||||||
தற்போதைய பகுதிகள் | பிலிப்பீன்சு | ||||||||||||
|
பொதுநலவாய அரசு ஒரு வலிமை வாய்ந்த செயலகத்தையும், ஒரு உச்சநீதிமன்றத்தையும் கொண்டு 10 ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டது. தேசியவாதக் கட்சியை முக்கிய கட்சியாகக் கொண்டு இதன் அரசியலமைப்பு ஆரம்பத்தில் ஓரவையாகவும், பின்னர் ஈரவை ஆகவும் செயல்பட்டது. 1937 இல், அரசு தகலாகு மொழியை மணிலாவிலும், அதன் சுற்றுவட்டத்திலும் தேசிய மொழியாக அறிவித்தது, ஆனாலும், இம்மொழி பல ஆண்டுகளுக்குப் பின்னரேயே பொதுப் பயன்பாட்டுக்கு வந்தது. பெண்கள் வாக்குரிமை சட்டபூர்வமாக்கப்பட்டது. 1942 இல் சப்பான் கைப்பற்றுவதற்கு முன்னரேயே இதன் பொருளாதாரம் பெரும் பொருளியல் வீழ்ச்சிக்கு முன்னரான கட்டத்தை எட்டியிருந்தது.
1942 முதல் 1945 வரை பொதுநலவாய அரசு நாடு-கடந்த நிலையில் இயங்கியது. 1946 இல், பொதுநலவாயம் முடிவுக்கு வந்து, பிலிப்பீன்சு முழுமையான விடுதலை அடைந்தது.[10]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.