விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia
இந்து சமய வர்ணாசிரம தர்மத்தின் படி, வேதம் ஓதுதல் மற்றும் ஓதுவித்தல் தொழில் மட்டுமே கடமையாகக் கொண்ட பிராமணர்கள், சில குறிப்பிட்ட காலங்களில் சத்தியர்களின் கடமைகளை (நாட்டை நிர்வகித்தல், போர் செய்தல்) கைக்கொண்டனர். அவ்வாறு பிராமணர்கள் தங்கள் குல தர்மத்தை விட்டு சத்திரியர்களின் குல தர்மத்தை ஏற்ற சில பிராமண அரச குலங்கள் பின் வருமாறு:
பரிவிராஜக வம்சம் – கி பி 5 மற்றும் ஆறாம் நூற்றாண்டில் குப்த பேரரசின் மத்திய இந்தியப் பகுதிகளை ஆண்ட பரத்துவாஜ கோத்திரத்தை சார்ந்த பிராமண அரச குலத்தவர்கள் ஆவார்.[9]
கதம்பர் வம்சம் (345 – 525 CE) இந்தியாவின் வடக்கு கர்நாடகா பகுதிகள் மற்றும் கோவா பகுதிகளை கி பி 345 முதல் 525 முடிய ஆண்ட பிராமண அரச குலமாகும்.
சாளுக்கியர் - கன்னட மொழி பேசும் உள்ளூர் பதாமி சாளுக்கிய பிராமண அரச குலத்தினர் கி.பி ஆறாம் நூற்றாண்டுக்கும், 12 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், தெற்கு மற்றும் மத்திய இந்தியாவின் பெரும் பகுதியை ஆண்டனர்.[10]
வாகாடகப் பேரரசு[12]இந்தியாவின்தக்கானப் பகுதியில் கி. பி மூன்றாம் நூற்றாண்டில் தோன்றிய பிராமணர் பேரரசாகும். இப்பேரரசு வடக்கே மால்வா மற்றும் குஜராத் பகுதியிலிருந்து, தெற்கே துங்கபத்திரை ஆறும், மேற்கே மகாராஷ்டிரம் வரையும், கிழக்கே தற்கால சத்திஸ்கர் வரை பரவியிருந்தது. விந்தியசக்தி மன்னர் கி. பி 250-270இல் தோற்றுவித்த இப்பேரரசை, கி. பி 250 முதல் 500 வரை தொடர்ந்து பல வாகாடக பிராமண அரச குல மன்னர்கள் ஆட்சி செய்தனர்.
Habung was a Chutiya dependency; that still earlier it was an autonomous principality ruled by Brahmins; and that the latter's origins could be traced back to a circa 10th-century copper-plate and grant issued by king Ratnapala (Guha 1984, p.73)
as in: Tarikh-al-Hind, trans. E. C. Sachau, 1888/1910, vol ii, pp 10, Abu Rihan Alberuni; Sehrai, Fidaullah (1979). Hund: The Forgotten City of Gandhara, p. 1. Peshawar Museum Publications New Series, Peshawar.