சர் பிராங்க் வாட்சன் டைசன் (Sir Frank Watson Dyson), [1] LLD, (8 ஜனவரி 1868 – 25 மே 1939) ஓர் ஆங்கிலேய வானியலாளரும் பிரித்தானியப் பேரரசின் மாவீரர் பட்டம் பெற்றவரும் அரசு கழக ஆய்வுறுப்பினரும் எடின்பர்கு அரசு கழக ஆய்வுறுப்பினரும் ஆவார். இவர் அரசு வானியலாளராக அமர்த்தப்பட்டார். இவர் இங்கிலாந்தில் உள்ள கிரீன்விச்சில் இருந்துள்ள பிப் ஒலி நேரக் குறிகைகளை அறிமுகப்படுத்தியதற்காகவும் ஐன்சுட்டைனின் பொது சார்பியல் கோட்பாட்டை நிறுவியதற்காகவும் பெயர்பெற்றவர்.

விரைவான உண்மைகள் சர் பிராங்க் வாட்சன் டைசன் Sir Frank Watson Dyson, பிறப்பு ...
சர் பிராங்க் வாட்சன் டைசன்
Sir Frank Watson Dyson
Thumb
பிறப்பு8 January 1868 (1868-01-08)
மீழ்சாம், இலைசெசுடெர்சயர், இங்கிலாந்து
இறப்பு25 May 1939 (1939-05-26) (aged 71)
கடலில்
தேசியம்பிரித்தானியர்
கல்வி கற்ற இடங்கள்டிரினிடி கல்லூரி, கேம்பிரிட்ஜ்]]
அறியப்படுவதுஅரசு வானியலாளர்
விருதுகள்அரசு பதக்கம் (1921)
கையொப்பம்
Thumb
மூடு

வாழ்க்கை

இவர் இலைசெசுடெர்சயரில் ஆழ்சுபை-தெ-லாசவுச் அருகில் உள்ள மீழ்சாமில் பிறந்தார். இவரது தந்தையார் புனித வாட்சன் டைசன் ஆவார். இவர் மரைப்பேராய அமைச்சர். இவரது தாயார் பிரான்சிசு டோடுவெல்.[2] இவரது பெற்றோர் இவரது இளம்பருவத்திலேயே யார்க்சயருக்கு இடம்பெயர்ந்தனர். அங்கே மேற்கு யார்க்சயரில் இருந்த ஆலிபாக்சில் உள்ள ஈத் இலக்கணப் பள்ளியில் கல்விபெற்ரார். கல்விநல்கை பெற்று பிராட்போர்டு இலக்கணப் பள்ளிக்கும் கேம்பிரிட்ஜ் டிரினிடி கல்லூரிக்கும் மாறினார். இக்கல்லூரியில் இவர் கணிதவியலும் வானியலும் கற்றார். இவர் அங்கே இரண்டாம் விரேங்கிளராக 1889 இல் விளங்கினார்.[3][4][5][6][7]

இவருக்கு 1894 இல் கிரீன்விச் வான்காணகத்தில் முதுநிலை உதவியாளர் பதவி வழங்கப்பட்டது. இங்கு இவருக்கு விண்மீன் வரைவியல் அட்டவணைப்பணி தரப்பட்டது. இந்த அட்டவணை 1905 இல் வெளியானது.[5]

இவர் இசுகாட்லாந்துக்கான அரசு வானியலாளராக 1905 முதல் 1910 வரை அமர்த்தப்பட்டார்.மேலும்1910 இல் இருந்து 1933 வரை அரசு வானியலாளராகவும் கிரீன்விச் வான்காணக இயக்குநராகவும் இருந்துள்ளார். இவர் அந்த வான்காணகத்துக்கு ஒரு புதிய விடுபட்ட தனி ஊசல் கடிகாரத்தை அறிமுகப்படுத்தினார். இது அக்காலத்தில் நிலவிய கடிகாரங்கள் அனைத்தினும் துல்லியமானதாகும்.[5]

இவரது சூரிய ஒளிமறைப்புத் தேட்ட ஆய்வுகள் இவருக்குப் பெரும்புகழ் ஈட்டின. இவர் சூரிய ஒளிமுகடு, வண்னக்கோள கதிர்நிரல்களில் பெரும்புலமை வாய்ந்தவர் ஆவார். இவர் 1919 இல் பிரேசில், பிரிசிபே ஆகிய இடங்களில் சூரிய ஒளிமறைப்பை நோக்கும் தேட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்தார். இந்நோக்கீடுகள் ஐன்சுட்டைனின் ஒளிமீதுள்ள ஈர்ப்பின் விளைவை உறுதிப்படுத்திச் சார்பியல் கோட்பாட்டை நிறுவின.[8]

இவர் 1939 இல் ஆத்திரேலியாவில் இருந்து இங்கிலாந்துக்குத் திரும்பும்போது கடலில் இறக்கவே கடலிலேயே அடக்கம் செய்யப்பட்டார்.[5]

தகைமைகளும் விருதுகளும்

  • அரசு கழக உறுப்பினர் (1901)[1]
  • உறுப்பினர், எடின்பரோ அரசு கழகம் - 1906
  • தலைவர், அரசு வானியல் கழகம் (1911–1913)
  • துணைத் தலைவர், அரசு கழகம் (1913–1915)
  • சர் பட்டம் (19150
  • தலைவர், பிரித்தானிய வானியல் கழகம், (1916–1918)
  • அரசு கழகத்தின் அரசு பதக்கம் (1921)
  • புரூசு பதக்கம், பசிபிக் வானியல் கழகம் (1922)
  • அரசு வானியல் கழகப் பொற்பதக்கம் (1925)
  • பிரித்தானியப் பேரரசின் ஆணை மாவீரர்(நைட்) பட்டம்]] (சர் பட்டம்) (1926)
  • பிரித்தானிய ஒரையியல் நிறுவனத்தின் பொற்பதக்கம் (1928)
  • பன்னாட்டு வானியல் ஒன்றியத்தின் தலைவர் (1928–1932)
  • நிலாவின் டைசன் குழிப்பள்ளமும் குறுங்கோள் 1241 டைசோனாவும் இவரது பெயரால் அழைக்கப்படுகின்றன.
Thumb
1919 ஆம் ஆண்டு தேட்டத்தின்போது எடுத்த சூரிய ஒளிமறைப்பின் ஒளிப்படம்[9]

குடும்பம்

இவர் 1894 இல் பலேமோன் பெசுட்டின் மகளாகிய கரோலின் பிசேத் பெசுட்டு அவர்களை மணந்தார். இவர்களுக்கு இரு மகன்களும் ஆறு மகள்களும் பிறந்தனர்.

பிராங்க் டைசனும் பிரீமன் டைசனும்

பிராங்கு டைசனும் கோட்பாட்டு இயற்பியலாளர் பிரீமன் டைசனும் உறவினர்கள் அல்லர். என்றாலும், பின்னவருக்குச் சர் பிராங்கு எனும் தகைமை அவரது வானியல் ஆர்வம் காரணமாக வழங்கப்படுகிறது: ஏனெனில், இவர்கள் இருவருமே டைசன் எனும் பின்னொட்டுப் பெயரைக் கொண்டுள்ளதாலும், பிரீமன் டைசனின் குடும்பம் பிரீமன் இளைஞராக இருந்தபோது சர் பிராங்கின் சாதனைகளைப் பற்றி விவாதித்து இம்முன்னோட்டுப் பெயரைப் பிரீமனுக்கு அவரது வானியல் சாதனைக்காக இட்டதாலும் ஏற்பட்டது.[சான்று தேவை] இவரது முதல் எழுத்து முயற்சி 1931 இல் " சர் பிலிப் இராபெர்ட்டின் எரோ நிலா(Erolunar) மோதல்" எனும் தலைப்புடைய இளம் எழுத்தாளர் இதழ்க் கட்டுரையாகும். இங்கு சர் பிலிப் என்பது சர் பிராங்கின் புனைபெயர் ஆகும்.

தேர்ந்தெடுத்த எழுத்துகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.