From Wikipedia, the free encyclopedia
பியர் ஜார்ஜியோ ஃபிராசாதி (6 ஏப்ரல் 1901 - 4 ஜூலை 1925) இத்தாலிய கத்தோலிக்கரும், உரோமன் கத்தோலிக்க திருச்சபையின் அருளாளரும் ஆவார்.
அருளாளர் பியர் ஜார்ஜியோ ஃபிராசாதி | |
---|---|
தன் தந்தையின் அலுவலகத்தில் ஃபிராசாதி (1920-களில்) | |
பிறப்பு | துரின், இத்தாலி | 6 ஏப்ரல் 1901
இறப்பு | 4 சூலை 1925 24) துரின், இத்தாலி | (அகவை
ஏற்கும் சபை/சமயங்கள் | உரோமன் கத்தோலிக்க திருச்சபை |
அருளாளர் பட்டம் | 20 மே 1990 by திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் |
திருவிழா | ஜூலை 4 |
இவர் துரின் நகரில், ஒரு செல்வந்த குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தை லா ஸ்டம்பா (en:La Stampa) என்னும் செய்தித்தாளினைத் துவங்கி நடத்திவந்தார். கல்வியில் சுமாராயிருப்பினும், தன் நண்பர்கள் மத்தியில் பக்திக்கும் விசுவாசத்திற்கும் பேர்போனவர் இவர்.
இவர் ஈகை, செபம் மற்றும் சமூகப் பணிக்கு தன் வாழ்வை அர்ப்பணித்தார். இவர் கத்தோலிக்க இளையோர் மற்றும் மாணாக்கர் சங்க உறுப்பினர். மேலும் தோமினிக்கின் மூன்றாம் சபையில் சேர்ந்திருந்தார். இவர் அடிக்கடி "ஈகை மட்டும் போதாது, சமூகப் மறுமலர்ச்சியும் தேவை" என்பார்.[1] திருத்தந்தை பதினொன்றாம் லியோவின் சுற்றுமடலான en:Rerum Novarum இன் படி ஒரு செய்தித்தாளை துவங்க உதவினார். 1918-இல் புனித வின்சண்ட் தே பவுல் சபையில் சேர்ந்து தன் நேரத்தை ஏழைகளுக்கு உதவுவதில் செலவிட்டார்.[2] தன் பெற்றோரிடமிருந்து பெறும் பயணச்செலவை குறைக்க மூன்றாம் தர தொடர்வண்டியில் பயணம் செய்தார். இதனால் சேமித்த தொகையை ஏழைகளுக்கு கொடுத்தார்.
இவர் பங்கு பெற்ற பக்த சபைகளில் வெளிப்போக்காக இல்லாமல், முழுமையாக ஈடுபட்டார். பாசிச கொள்கைகளுக் எதிராக வெளிப்படையாகவே செயல்பட்டார்.
ஒரு முறை உரோம் நகரில், கத்தோலிக்க திருச்சபையினால் ஆதரிக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு வேறோருவர் கையிலிருந்து காவலர்கள் தட்டிவிட்ட விளம்பர பதாகையை இவர் இன்னும் உயத்திப்பிடித்தபடி சென்றார். இதனால் இவர் சிறை செல்ல நேர்ந்தது. அங்கே தன் தந்தையின் செல்வாக்கை பயன்படுத்தவில்லை. ஒருமுறை இவர் வீட்டினுள் பாசிசர்கள் புகுந்து இவரையும் இவரின் தந்தையையும் தாக்கினர், இவர் தனியொரு ஆளாய் அவர்களைத் தாக்கி தெருவில் ஓட ஓட விரட்டினார்.
1925-இல் தனது 24-ஆம் அகவையில் இளம்பிள்ளை வாதத்தால் இவர் மரித்தார். இவரின் குடும்பத்தினர் வியப்புக்குள்ளாகும் வகையில் இவரது இறுதி ஊர்வளத்தில் பெரும் திரளான ஏழை மக்கள் கலந்துக்கொண்டனர். இம்மக்களின் வேண்டுதலுக்கு இணங்கி தூரின் நகர பேராயர் புனிதர் பட்டத்திற்கான முயற்சிகளை 1932-இல் துவங்கினார். 20 மே 1990 அன்று முக்திபேறு பட்டம் அளிக்கையில், திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் இவரை மலைப்போழிவின் மனிதர் எனப் புகழ்ந்தார். இவரின் விழா நாள் 4 ஜூலை ஆகும்.
ஓக்லகோமாவில் உள்ள, இவரின் குடும்பத்தினரால் இவர் நினைவாக பராமரிக்கப்படும் Bishop McGuinness High School என்னும் பள்ளியின் பாதுகாவலராய் இவர் கருதப்படுகின்றார்.[3]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.