![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/32/Hebron_Cave_of_the_Patriarchs.jpg/640px-Hebron_Cave_of_the_Patriarchs.jpg&w=640&q=50)
பிதாப்பிதாக்களின் குகை
From Wikipedia, the free encyclopedia
பிதாப்பிதாக்களின் குகை அல்லது பெருந்தந்தையர்களின் குகை (Cave of the Patriarchs, (எபிரேயம்: מערת המכפלה, Me'arat ha-Machpelaⓘ, மொழிபெயர்ப்பு "இரட்டைக் கல்லறைகளின் குகை"; முசுலிம்கள் குறிப்பு: ஆபிரகாமின் புகலிடம் அல்லது இப்றாகிமின் பள்ளிவாசல்; அரபு மொழி: الحرم الإبراهيمي, Al-Haram Al-Ibrahimiⓘ) என்பது எபிரோன் குன்றுகளில் அமைந்துள்ள, எபிரோன் பழைய நகரின் மையத்தில் அமைந்துள்ள நிலத்துக்கடி அறைகளின் தொடர்ச்சியாகும்.Gen. 23:17-19Gen. 50:13 பாரம்பரியத்தின்படி, இது தோராவுடனும் திருக்குர்ஆன்னுடனும் தொடர்புபட்டது. இதன்படி, இக்குகையும் அதனுடன்கூடிய இடமும் அடக்கம் செய்வதற்காக ஆபிரகாமினால் வாங்கப்பட்டதாகும்.
பிதாப்பிதாக்களின் குகை எபிரேயம்: מערת המכפלה, அரபு மொழி: الحرم الإبراهيمي | |
---|---|
![]() தென் பகுதி | |
மாற்றுப் பெயர் | Sanctuary of Abraham or Cave of Machpelah |
இருப்பிடம் | எபிரோன் |
பகுதி | மேற்குக் கரை |
ஆயத்தொலைகள் | 31.524744°N 35.110726°E / 31.524744; 35.110726 |
வகை | கல்லறை, பள்ளிவாசல் |
வரலாறு | |
கலாச்சாரம் | அயூபிட், எபிரேயர், பைசாந்தியர், சிலுவைப்போர் வீரர்கள் |
பிதாப்பிதாக்களின் குகைப் பகுதி சலாகுத்தீன் காலப் பள்ளிவாசலின் கீழ் அமைந்துள்ளது. இப்பள்ளிவாசல் பாரிய செவ்வக எரோதிய கால யூதேய கட்டமைப்பிலிருந்து மாற்றப்பட்டுள்ளது.[1]