![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/4d/Fidel_Castro.jpg/640px-Fidel_Castro.jpg&w=640&q=50)
பிடல் காஸ்ட்ரோ
வரலாறு என்னை விடுதலை செய்யும் / From Wikipedia, the free encyclopedia
பிடல் காஸ்ட்ரோ (Fidel Alejandro Castro Ruz, (எசுப்பானியம்: [fiˈðel ˈkastro], ஆகஸ்ட் 13, 1926 - நவம்பர் 25, 2016) கியூபாவை சேர்ந்த பொதுவுடைமைப் புரட்சியாளரும் பொதுவுடைமை அரசியல்வாதியும் ஆவார். கியூபாவில் 1959 இல் புரட்சியை வழிநடத்தி புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவின் அரசை வீழ்த்தி தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்ற காஸ்ட்ரோ ,1959 முதல் 1976 வரை கியூபாவின் பிரதமராகவும், 1976 முதல் 2008 வரை ஜனாதிபதியாகவும் பொறுப்பு வகித்தார்.கூபாவின் பொதுவுடைமைக் கட்சியின் முதல் செயலாளராக 1965 இல் பதவியேற்ற இவர் கூபாவை ஒற்றைக் கட்சி சமூகவுடைமைக் குடியரசாக்கினார். 49 ஆண்டுகள் கியூபாவை ஆண்ட காஸ்ட்ரோ பிப்ரவரி 24 2008 அன்று பதவியிலிருந்து விலகினார். உலகத்தில் நீண்ட காலத்துக்கு தலைமைப் பொறுப்பில் இருந்த தலைவர் காஸ்ட்ரோ மட்டுமே. பன்னாட்டளவில், காஸ்ட்ரோ 1979-ல் இருந்து 1983 வரை மற்றும் 2006 முதல் 2008 வரை, அணி சேரா இயக்கத்தின் பொதுச் செயலாளராக இருந்துள்ளார்.[2]
பிடல் காஸ்ட்ரோ | |
---|---|
![]() 2003 இல் பிடல் காஸ்ட்ரோ | |
கியூபாவின் 17வது அரசுத்தலைவர் | |
பதவியில் டிசம்பர் 2, 1976 – பெப்ரவரி 24, 2008 | |
Vice President | ராவுல் காஸ்ட்ரோ |
முன்னையவர் | ஒசுவால்டோ டோர்ட்டிகோசு டொராடோ |
பின்னவர் | ராவுல் காஸ்ட்ரோ |
கூபாவின் பொதுவுடைமைக் கட்சியின் தலைமைச் செயலாளர் | |
பதவியில் சூன் 24, 1961 – ஏப்ரல் 19, 2011 | |
Deputy | ராவுல் காஸ்ட்ரோ |
முன்னையவர் | பிளாசு ரொக்கா கால்டேரியோ |
பின்னவர் | ராவுல் காஸ்ட்ரோ |
கியூபா அமைச்சர்கள் பேரவையின் தலைவர் | |
பதவியில் டிசம்பர் 2, 1976 – பெப்ரவரி 24, 2008 | |
குடியரசுத் தலைவர் | அவரே |
முன்னையவர் | அவரே (பிரதமராக) |
பின்னவர் | ராவுல் காஸ்ட்ரோ |
கியூபாவின் 16வது பிரதமர் | |
பதவியில் பெப்ரவரி 16, 1959 – டிசம்பர் 2, 1976 | |
குடியரசுத் தலைவர் | மனுவேல் லெயோ ஒசுவால்டோ டொராடோ |
முன்னையவர் | ஒசே கார்டோனா |
பின்னவர் | அவரே (அமைச்சர்களின் பேரவைத் தலைவராக) |
கூட்டுச்சேரா இயக்கத்தின் 7வது, 23வது பொதுச் செயலாளர் | |
பதவியில் செப்டம்பர் 16, 2006 – பெப்ரவரி 24, 2008 | |
முன்னையவர் | அப்துல்லா அகுமது பதவீ |
பின்னவர் | ராவுல் காஸ்ட்ரோ |
பதவியில் செப்டம்பர் 10, 1979 – மார்ச் 6, 1983 | |
முன்னையவர் | ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா |
பின்னவர் | நீலம் சஞ்சீவ ரெட்டி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | Fidel Alejandro Castro Ruz (1926-08-13)ஆகத்து 13, 1926 பிரான், கியூபா |
இறப்பு | நவம்பர் 25, 2016(2016-11-25) (அகவை 90)[1] சந்தியாகோ தெ கியூபா மாகாணம், கியூபா |
அரசியல் கட்சி | பழமைவாதக் கட்சி (1946–1952) சூலை 26 இயக்கம் (1953–1965) கூபாவின் பொதுவுடைமைக் கட்சி (1965–2016) |
துணைவர்(கள்) | மிர்த்தா டயசு-பலார்ட் (1948–55) தாலியா சோட்டோ டெல் வால் (1980 முதல்) |
பிள்ளைகள் | 9 |
வாழிடம் | சந்தியாகோ டெ கியூபா |
முன்னாள் கல்லூரி | அவானா பல்கலைக்க்ழகம் |
தொழில் | வழக்கறிஞர் |
கையெழுத்து | ![]() |
| |
அமெரிக்காவில் இருந்து 93 மைல் தொலைவில் இருந்தாலும் கியூபாவை ஒரு சோசலிச நாடாகப் பேணிய பெருமை இவரைச் சாரும். இதைவிட ருசியா-அமெரிக்க பனிப்போர் நடந்த வேளையில் இவர் ருசியாவிற்குச் சாதகமாகப் பல பணிகளைச் செய்தார்.