பால்மம்
From Wikipedia, the free encyclopedia
ஒன்றுடன் ஒன்று கலவாத இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நீர்மங்கள் கலந்த கலவையே பால்மம் (Emulsion) எனப்படுகிறது.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/ca/Emulsions.svg/180px-Emulsions.svg.png)
- ஒன்றுடன் ஒன்று கலவதா இரண்டு நீர்மங்கள். இவை பால்மமாகவில்லை.
- பால்மமாக நிலை II உள்ள நீர்மம் பிரிகை நிலை I ல் விரவி காணப்படுகிறது.
- நிலையற்ற பால்மம் தனியாக பிரிந்துள்ளது.
- பால்மங்களை நிலைத்தன்மை உடையதாக்க நிலை I மற்றும் நிலை II இடையே புறப்பரப்பு கவர்ச்சிப்பொருள் உள்ளது,
பால்மம் என்ற சொல் இலத்தீன் மொழியில் "பால்" என்று பொருள்படும் mulgeo, mulgere என்ற சொல்லில் இருந்து வந்துள்ளது.பால் என்பது மற்ற கூறுகளுடன் கொழுப்பு மற்றும் தண்ணீர் சேர்ந்த பால்மமே ஆகும்.
இரண்டு நீர்மங்கள் இணைந்து வெவ்வேறு வகையான பால்மங்களை உருவாக்குகின்றன. உதாரணமாக, எண்ணெய் மற்றும் நீர். இவை இரண்டும் இணைந்து முதலில் ,
- "எண்ணெய் பிரிகையைடந்துள்ள நீர்- பால்மம்" உருவாகிறது. இதில் எண்ணெய் பிரிநிலையாகவும், நீர் பிரிகை ஊடகமாகவும் உள்ளது. எடுத்துக்காட்டு: லிபோபுரோட்டீன். இரண்டாவதாக,
- "நீர் பிரிகையடைந்துள்ள எண்ணெய் - பால்மம்" உருவாகிறது. இதில், நீர் பிரிநிலையாகவும், எண்ணெய் பிரிகை ஊடகமாகவும் உள்ளது.
மேலும், பல்வகையான பால்மங்களும் உருவாகின்றன. அவை, "நீர்-எண்ணெய்-நீர்" பால்மம் மற்றும் "எண்ணெய்-நீர்-எண்ணெய்" பால்மம் என இரண்டு வகையும் காணப்படுகின்றன.[1][2]
பால்மங்கள் நிலையற்ற உள்ளமைப்பைக் கொண்ட நீர்மங்கள் ஆகும். அதாவது, மிகச் சிறிய துளிகள் மற்றொரு நீர்மத்தில் பரவியுள்ள அமைப்பாகும். இது பிரிகை ஊடகம் என்று அழைக்கப்படுகிறது.
ஒளிப்படத்தாளின் ஒளிப்புலன் பகுதிகளுக்கு ஆதாரமாக "பால்மம்" பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறன ஒளிப்படப் பால்மங்களில் வெள்ளி ஆலைடு கூழ்மத்துகள்கள் செலாட்டின் தளங்களில் விரவியுள்ளது. துகள் இயற்பியலில் உயர் ஆற்றல் உடைய அடிப்படைத் துகள்களைக் கண்டறிவதைத் தவிர ஒளிப்படப்பால்மம், அணுக்கரு பால்மத்தை ஒத்துள்ளது.