பாட்டி யென்கின்சு
From Wikipedia, the free encyclopedia
பாட்ரிசியா லியா யென்கின்சு[1] (ஆங்கில மொழி: Patty Jenkins) (பிறப்பு: சூலை 24, 1971)[2] என்பவர் அமெரிக்க நாட்டு திரைப்பட திரைப்பட இயக்குனர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். இவர் மான்ஸ்டர் (2003), வொண்டர் வுமன் (2017),[3] மற்றும் வொண்டர் வுமன் 1984 (2020) ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
பாட்டி யென்கின்சு | |
---|---|
பிறப்பு | பாட்ரிசியா லியா யென்கின்சு சூலை 24, 1971 (1971-07-24) (அகவை 52) விக்டர்வில்லே, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா |
பணி | |
செயற்பாட்டுக் காலம் | 1995–இன்று வரை |
பெற்றோர் |
|
வாழ்க்கைத் துணை | சாம் ஷெரிடன் (தி. 2007) |
பிள்ளைகள் | 1 |
இவர் இயக்கிய மான்ஸ்டர்[4] படத்திற்காக சிறந்த முதல் அம்சத்திற்கான இன்டிபென்டன்ட் சிபிரிட் விருதையும் மற்றும் அமெரிக்கன் பிலிம் இன்ஸ்டிடியூட் இன் பிராங்க்ளின் ஜே. ஷாஃப்னர் விருதையும் வென்றார்.[5]அதை தொடர்ந்து தி கில்லிங் (2011) என்ற தொடரின் ஒரு கதை அத்தியாயத்தை இயக்கியத்ததற்காக இவர் பிரைம் டைம் எம்மி விருது பரிந்துரையையும், நாடகத் தொடரில் சிறந்த இயக்குனருக்கான டைரக்டர்ஸ் கில்ட் ஆஃப் அமெரிக்கா விருதையும் பெற்றார். இவர் 2017 ஆம் ஆண்டில், டைம் இதழின் ஆண்டின் சிறந்த நபருக்கான பட்டியலில் ஆறாவது இடத்தைப் பிடித்தார்.